இந்தியா

1.இஸ்ரேல் நாட்டிற்கு சென்ற முதல் இந்திய பிரதமர் என்ற சிறப்பை பெற்ற பிரதமர் நரேந்திர மோடி, இந்தியா சார்பாக கேரளாவிலிருந்து கொண்டு சென்ற இரு நினைவுப் பரிசுகளை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு வழங்கியுள்ளார்.யூதர்களின் வரலாற்றை பிரதிபலிக்கும் இரு காப்பர் தகடுகள் நினைவுப்பரிசாக வழங்கியுள்ளார். இவை 9-ஆம் மற்றும் 10-ஆம் நூற்றாண்டை சார்ந்தவை ஆகும்.மேலும் தென்னிந்தியாவின் கலையை பிரதிபலிக்கும் தங்கத்தால் பூசப்பட்ட உலோக கிரீடம் ஒன்றையும் பரிசாக வழங்கியுள்ளார்.
2.இந்தியாவின் மிக பழமையான பத்திரிகையான Statesman., ஜனாதிபதி பிரணாப்முகர்ஜியின் பதவிகாலத்தில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளின் புகைப்படங்கள் அடங்கிய தொகுப்பை “President Pranab Mukherjee – A Statesman” என்ற பெயரில் தயாரித்துள்ளது.இதனை பிரதமர் மோடி வெளியிட்டுள்ளார் .
3.போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வண்ணம் , மென்பொருள் பணியாளர்கள் பலரும் சேர்ந்து / பகிர்ந்து செல்லக்கூடிய வாகன போக்குவரத்தை ஊக்குவிக்க கேரளா முதலவர் G-Ride என்ற திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார்.
4.மத்தியப் பிரதேச மாநிலத்தில் ஜூலை 03 அன்று காலை 07 மணி முதல் மாலை 07 வரை 12மணி நேரத்தில் காற்று, நீர் ஆகியவை மாசுபடுவதைத் தடுத்துச் சுற்றுச்சூழலைக் காப்பதற்காக சீகூர் மாவட்டத்தின் அமர்கந்தக் நகரில் நர்மதை ஆற்றின் கரையில் 24 மாவட்டங்களில் 6 கோடி மரங்கள் நடப்பட்டு கின்னஸ் சாதனை செய்யப்பட்டுள்ளது.முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் இதனை தொடங்கி வைத்துள்ளார்.


உலகம்

1.இராக்கின் மோசூல் நகரிலுள்ள 840 வருடம் பழமை வாய்ந்த அல் நூரி மசூதியை ஐஎஸ் தீவிரவாதிகளை வெடிகுண்டு வீசி அழித்துள்ளனர்.
2.இலங்கையின் ராணுவ தளபதியாக இருந்த சிறிஷாந்தா டி சில்வா கடந்த வாரம் முப்படைகளின் தளபதியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.இதையடுத்து யாழ்ப்பாணத்தில் பாதுகாப்பு படைகளின் கமாண்டராக பணியாற்றி வரும் மகேஷ் சேனநாயகே புதிய ராணுவ தளபதியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.


இன்றைய தினம்

1.1903 – யாழ்ப்பாணத்தில் இந்து இளைஞர் அமைப்பு (YMHA) உருவாக்கப்பட்டது.
2.1948 – பாகிஸ்தான் தனது முதலாவது அஞ்சல் தலையை வெளியிட்டது.

 

– தென்னகம்.காம் செய்தி குழு