இந்தியா

1.புயல், சுனாமி , நிலநடுக்கம் போன்றவற்றை முன்கூட்டியே கண்டறிந்து எச்சரிக்கும் இயற்கை பேரிடர் எச்சரிக்கை கருவியை(Early Warning Dissemination System (EWDS)) , இந்தியாவிலேயே முதலாவதாக ஓடிஸா அரசு நிறுவியுள்ளது.
2.ஆம்புலன்சில் பயணிக்கும் நோயாளியின் உடல்நிலையை (AmbuSens) கண்காணிக்கும் தொழில் நுட்பத்தை காரக்பூர் IIT விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.
3.1994க்குப்பின் மீண்டும் ஒரு ரூபாய் நோட்டு வெளியிடப்பட இருக்கின்றது. இதில் மத்திய பொருளாதார விவகாரங்கள் துறை செயலரின் கையெழுத்து இடம்பெற்று இருக்கும்.


வர்த்தகம்

1.TELENOR நிறுவனம் , AIRTEL நிறுவனத்துடன் இணைய SEBI ஒப்புதல் வழங்கியுள்ளது.
2.பங்குச்சந்தைகளில் பட்டியலிடப்பட்டுள்ள பெரு நிறுவனங்களின் தரத்தை மேம்படுத்த, செபி அமைப்பு உதய் கோடக் தலைமையில் குழு ஒன்றை உருவாக்கியுள்ளது.


விளையாட்டு

1.சர்வதேச டேபிள் டென்னிஸ் அமைப்பின், நடுவர்கள் மற்றும் நடுவர்கள் குழுவில் (Umpires and Referees Committee) கணேஷன் நீலகண்ட ஐயர் என்ற இந்தியர் முதன் முறையாக இடம்பிடித்துள்ளார்.


இன்றைய தினம்

1.1934 – வால்ட் டிஸ்னியின் டொனால்ட் டக் வரைகதை வெளிவந்தது.

 

– தென்னகம்.காம் செய்தி குழு