current3

தமிழகம்

1.இந்தியாவில் முதல் முறையாக அரசு மருத்துவமனைகளில் சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீக்காயங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க ‘தோல் வங்கி’ தொடங்கப்பட்டுள்ளது.

இந்தியா

1.செப்டம்பர் 04 & 05ல் மேற்கு வங்காள மாநிலம் சிலிகுரியில் உலக நாணயம் , ரூபாய் நோட்டுகள் கண்காட்சி மற்றும் ஏலம் நடைபெற்றது.
2.ஜம்மு & காஷ்மீர் முதல்வர் கல்லூரி பயிலும் பெண்களுக்கு 50% மானிய விலையில் இருசக்கர வாகனம் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார்.
3.பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான மத்திய அரசு பிரதம மந்திரியின் பாதுகாப்பான தாய்மை திட்டம் என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.இந்த திடத்தின் மூலம் கர்ப்பிணி பெண்களுக்கு அரசு மருத்துவமனைகளில், ஒவ்வொரு மாதமும் 9ம் தேதி இலவச மருத்துவ சோதனை செய்யப்படும்.இத்திட்டத்தின் கீழ் கர்ப்பம் தரித்த 3வது மாதம் முதல் 6வது மாதம் வரை இலவச பரிசோதனை செய்து கொள்ளலாம்.
4.ஆதார் அட்டைகள் வழங்கும்(Unique Identification Authority of India) பகுதிநேர தலைவராக ஓய்வு பெற்ற IAS அதிகாரி J. சத்தியநாராயணா நியமிக்கப்படுள்ளார்.2014ல் நந்தன் நிலகேனி ராஜினாமா செய்தது முதல் இப்பதவி நிரப்பப்படாமல் இருந்தது.மேலும் ராஜேஷ் ஜெயின் மற்றும் ஆனந்த் தேஷ்பாண்டே ஆகியோர்  UIDAI அமைப்பின் பகுதிநேர உறுபினர்களாக நியமிக்கப்படுள்ளனர்.UIDAI அமைப்பின் தலைமை செயல் அதிகாரியாக அஜய் பூஷன்பாண்டே செயல்படுகிறார்.
5.உத்திரபிரதேச அரசு குற்றவழக்குகளில் சாட்சியம் அளிக்க வரும் அரசு தரப்பு சாட்சிகளுக்கு மஞ்சள் நிற அடையாள அட்டை வழங்க முடிவு செய்துள்ளது.