நடப்பு நிகழ்வுகள் – 09 ஏப்ரல் 2017
இந்தியா
1.இந்திய மென்பொருள் நிறுவனங்களின் துணை தலைவராக விப்ரோ நிறுவனர் அஸிம் பிரேம்ஜியின் மகன் ரிஷாத் பிரேம்ஜி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
2.உத்தரப்பிரதேச மாநிலத்தில் குடும்ப நல நீதிபதி தேஜ் பகதுர் சிங் ஓரே வருடத்தில் 6,065 வழக்குகளை தீர்வு செய்து கின்னஸ் சாதனை புரிந்துள்ளார்.
3.மத்திய பிரதேசத்தில் 5 ரூபாய்க்கு மதிய உணவு வழங்கும் உணவகங்களை முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் கடந்த ஏப்ரல் 7-ஆம் தேதி தொடங்கி வைத்தார்.
வர்த்தகம்
1.எல் அண்ட் டி நிறுவனத்தின் தற்போதைய செயல் தலைவரான ஏ.எம் நாயக்கின் பதவி காலத்தை மேலும் மூன்று ஆண்டுகள் நீட்டிக்கப்பட்டுள்ளது.தலைமைச் செயல் அதிகாரியாக எஸ்.என்.சுப்ரமணியன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.இயக்குநர் குழு இவர்களை தேர்வு செய்துள்ளது.
உலகம்
1.உலக பொருளாதார மன்றம் உலக அளவில் சுற்றுலா மற்றும் பயண போட்டித்தன்மைகள் கொண்ட நாடுகள் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் ஸ்பெயின் நாடு முதல் இடத்தையும்,பிரான்ஸ் இரண்டாவது இடத்தையும்,ஜெர்மனி மூன்றாவது இடத்தையும்,ஜப்பான் நான்காவது இடத்தையும்,சீனா 13-வது இடத்தையும் பிடித்துள்ளன.இந்த பட்டியலில் இந்தியா 40-வது இடத்தை பிடித்துள்ளது.
விளையாட்டு
1.சர்வதேச குத்துச்சண்டை சாம்பியன் போட்டி தாய்லாந்தின் பட்டாயா நகரில் நடைபெற்று வருகிறது. இதில் 49 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீரர் ஷ்யாம் குமார் (19), தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.
இன்றைய தினம்
1.முதல் போயிங் 737 ரக விமானம் பறந்த நாள் 09 ஏப்ரல் 1967.
2.வார்னர் பிரதர் நிறுவனம் முதல் 3டி திரைப்படமான “ஹவுஸ் ஆப் வக்ஸ்” வெளியான நாள் 09 ஏப்ரல் 1953.
– தென்னகம்.காம் செய்தி குழு