current2

தமிழகம்

1.ராசிபுரத்தில் நடைபெற்ற மாநில அளவிலான மிஸ்டர் தமிழ்நாடு ஆணழகன் போட்டியில் காஞ்சிபுரம் வீரர் ராஜேந்திரன் மணி, “மிஸ்டர் தமிழ்நாடு 2016′ ஆகத் தேர்வு செய்யப்பட்டார்.

இந்தியா

1.வேளாண்மைத் துறையில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள், நவீன தொழில்நுட்பங்கள் குறித்து, இந்தியாவில் உள்ள அனைத்துப் பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகளும் அறிந்து பயனடையும் வகையில் “கிசான் சுவிதா’ என்ற புதிய செயலி (ஆப்) மத்திய அரசின் சார்பில் தொடங்கப்பட்டுள்ளது.
2.மாநிலங்களவையிலும் நாடு முழுவதும் ஒரே சீரான வரிவிதிப்பை நிர்ணயம் செய்யும் விதமாக ஜி.எஸ்.டி. என்று அழைக்கப்படும் சரக்கு மற்றும் சேவை வரி முறை மசோதா சில திருத்தங்களுடன் நிறைவேறியது.

உலகம்

1.இன்று நாகசாகி தினம்(Nagasaki Day).அமெரிக்கா 1945ஆம் ஆண்டு ஆகஸ்டு 9 அன்று பேட் மேன் (Fat Man) என்னும் அணுகுண்டை ஜப்பானில் உள்ள நாகசாகி என்கிற நகரத்தின்மீது வீசியது. இக்குண்டு 3.5 மீட்டர் நீளமும், 1.5 மீட்டர் விட்டமும், 4500 கிலோ எடையும், 1 கிலோ புளுட்டோனியத்தையும் கொண்டது. இக்குண்டு வீசப்பட்ட சில நொடிகளில் 74000 பேர் உயிர் இழந்தனர். அணுகுண்டின் விபரீதத்தை நினைவு கூற இத்தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
2.இன்று சர்வதேச உலக பூர்வ குடிமக்கள் தினம்/பன்னாட்டு உலக பழங்குடிகள் நாள்(International Day of the World’s Indigenous People).ஐ.நா. பொதுச்சபை 1994ஆம் ஆண்டு டிசம்பர் 23 அன்று ஒரு தீர்மானத்தில் ஆகஸ்டு 9 ஐ உலக பூர்வ குடிமக்கள் தினமாக அறிவித்தது. இத்தினம் 1995ஆம் ஆண்டுமுதல் கடைப்பிடிக்கப்படுகிறது. பூர்வ குடிகளின் கலாச்சாரம் பாதுகாத்தல், அரசியல், கல்வி, மொழி போன்றவற்றைக் கொடுத்தல், இவர்களுக்கு எதிராக நடக்கும் ஆக்கிரமிப்பை தடுத்தல் போன்ற விழிப்புணர்வு ஏற்படுத்த இத்தினம் கொண்டாடப்படுகிறது.
3.இன்று சிங்கப்பூர் விடுதலை அடைந்த நாள்.சிங்கப்பூர் மலேசியக் கூட்டமைப்பில் இருந்து பிரிந்து தனி நாடாகியது.விடுதலை அடைந்த தேதி 09 ஆகஸ்டு 1965.
4.இன்று தென்னாபிரிக்காவில் தேசிய பெண்கள் நாள் கொண்டாடப்படுகிறது.