இந்தியா

1.வெளிநாடுகளுக்கான இந்திய தூதர்களின் 8-வது 4 நாள் மாநாடு டெல்லியில் மே 05ல் துவங்கியுள்ளது.இந்த மாநாட்டின் கருப்பொருள் Effective Diplomacy, Excellent Delivery ஆகும்.
2.டெல்லி உயர்நீதிமன்ற முதல் பெண் நீதிபதி மற்றும் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பணியாற்றிய முதல் பெண்மணி லெய்லா சேத் (Leila Seth) வயது முதிர்வின் காரணமாக காலமானார்.


விளையாட்டு

1.பிரிட்டன் மென்ஸா உலக நுண்ணறிவுத்திறன் போட்டியில், இந்திய வம்சாவழி மாணவி ராஜ்கவுரி பவார் 162 புள்ளிகள் பெற்று சாதனை படைத்துள்ளார்.உலகின் தலைசிறந்த விஞ்ஞானிகளான ஐன்ஸ்டீன், ஸ்டீபன் ஹாக்கிங் போன்றோர் இப்போட்டியில் 160 புள்ளிகளையே பெற்றுள்ளது குற்பிப்பிடத்தக்கது.
2.உஸ்பெகிஸ்தானின் தாஷ்கண்ட் நகரில் நடைபெற்ற ஆசிய குத்துச்சண்டை போட்டியில், 60 கிலோ எடைப் பிரிவில் இந்திய வீரர் சிவா தாபா , உஸ்பெகிஸ்தானின் எல்னூர் அப்துரையோவிடம் தோல்வியை தழுவியதால் வெள்ளி பதக்கத்தை கைப்பற்றினார்.
3.மலேசியாவின் இபோ நகரில் நடைபெற்ற 26வது சுல்தான் அஸ்லான் ஷா கோப்பை ஹாக்கி இறுதிப்போட்டியில், பிரிட்டன் ஆஸ்திரேலியாவை தோற்கடித்து 23 ஆண்டுகளுக்கு (1994) பின் கோப்பையை கைப்பற்றியது.இந்திய அணி இந்த தொடரில் 3வது இடத்தை பிடித்து வெண்கலப் பதக்கம் வென்றது.


இன்றைய தினம்

1.இன்று மற்றும் நாளை இரண்டாம் உலகப் போரில் உயிரிழந்தோருக்கான நினைவு நாள் (Time of Remembrance and Reconciliation for Those who last Their Lives during the Second world war).
இரண்டாம் உலகப் போரின்போது பல லட்சக்கணக்கானோர் உயிரிழந்தனர். இது பூமியில் நிகழ்ந்த கொடுமையான வரலாற்று நிகழ்வாகும். எதிர்காலத்தில் மீண்டும் இது போன்று ஒரு யுத்தம் ஏற்படக் கூடாது என்பதை நினைவுறுத்தும் வகையில் இரண்டாம் உலகப் போரில் உயிரிழந்தவர்களுக்காகவும் பாதிக்கப்பட்டவர்களுக்காகவும் நினைவஞ்சலி மற்றும் நல்லிணக்க நாளாக கடைப்பிடிக்கப்படுகிறது.
2.இன்று உலக செஞ்சிலுவை மற்றும் செம்பிறை நாள்(International Red Cross and Red Crescent Day) .
உலக செஞ்சிலுவை மற்றும் செம்பிறை நாள் மே 8ஆம் நாளன்று அனைத்து நாடுகளிலும் கொண்டாடப்பட்டு வருகிறது. முதலாவது நோபல் விருதைப் பெற்ற வரும் செஞ்சிலுவைச் சங்கத்தின் ஆரம்பகர்த்தாவுமான ஹென்றி டியூனாண்ட் (Henry Dunant) அவர்களின் பிறந்த நாளான (மே 8, 1828) இந்நாள் 1948 ஆம் ஆண்டிலிருந்து சிறப்பு நாளாக அங்கீகரிக்கப்பட்டது.
3.பராமவுண்ட் பிக்சர்ஸ் நிறுவனம் ஆரம்பிக்கப்பட்ட நாள் 08 மே 1914.

 

– தென்னகம்.காம் செய்தி குழு