தமிழகம்

1.சென்னையில் இயங்கிவரும் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென்னிந்திய அமர்வுக்கு தற்காலிகமாக தொழில்நுட்ப உறுப்பினராக நாகின் நந்தா நியமிக்கப்பட்டுள்ளார்.பசுமை தீர்ப்பாயத்தின் தலைவர் ஸ்வதந்த்ர குமார் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.


இந்தியா

1.நாட்டில் பயன்பாட்டில் இல்லாத 50 விமான நிலையங்கள் மற்றும் விமான ஓடுபாதைகளை புதுப்பிப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ள ரூ.4,500 கோடி மதிப்பிலான திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை கடந்த மார்ச் 06-ஆம் தேதி ஒப்புதல் வழங்கியுள்ளது.
2.நாட்டிலேயே மிகப் பெரியதாகக் கருதப்படும் மூவர்ணக் கொடி பஞ்சாப் மாநிலம், அட்டாரி அருகே உள்ள இந்திய-பாகிஸ்தான் எல்லையில், மிக உயரமான கம்பத்தில் ஏற்றிவைக்கப்பட்டுள்ளது.இந்த கொடி 120 அடி நீளமும், 80 அடி அகலமும்,110 மீட்டர் (360 அடி) உயரமுள்ள கம்பத்தில் ஏற்றி வைக்கப்பட்டுள்ளது.
3.மக்களவையின் முன்னாள் தலைவரும், பிரபல சோஷலிஸ தலைவருமான ரபி ராய் (90), கடந்த மார்ச் 6-ஆம் தேதி  காலமானார்.இவர் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் ஆவார்.
4.காயத்ரி வீணையில் தொடர்ந்து 5 மணி நேரத்தில் 67 பாடல்களை இசைத்து பிரபல இசைக் கலைஞர் வைக்கம் விஜயலட்சுமி புதிய சாதனை புரிந்துள்ளார்.இவர் கேரளாவின் எர்ணாகுளம் அருகில் உள்ள வைக்கம் பகுதியில் பிறந்தவர் ஆவார்.மேலும் இவர் பிறவியிலேயே பார்வை குறைபாட்டுடன் பிறந்தவர் ஆவார்.


விளையாட்டு

1.பெங்களூருவில் நடைபெற்ற இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான 2-வது டெஸ்டில் ஆஸ்திரேலியா அணி 75 ரன் வித்தியாசத்தில் இந்திய அணியிடம் தோல்வியடைந்தது.ஆட்ட நாயகன் விருது லோகேஷ் ராகுல்க்கு வழங்கப்பட்டது.
2.இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரான அஸ்வின் டெஸ்ட் கிரிக்கெட்டில் விரைவாக 25 முறை 5 வி்க்கெட்டுக்கள் வீழ்த்திய முதல் வீரர் என்ற சாதனையைப் புரிந்துள்ளார்.இவர் நேற்று பெங்களூருவில் நடைபெற்ற டெஸ்டில் இந்த சாதனையை புரிந்துள்ளார்.47 டெஸ்டில் இவர் இந்த சாதனையை எட்டியுள்ளார்.


இன்றைய தினம்

1.இன்று சர்வதேச பெண்கள் தினம் (International Women’s Day).
ஐ.நா. சபை பெண்களுக்கு சம உரிமை வழங்குவது என்பது மனித அடிப்படை உரிமை எனக் கூறி 1945ஆம் ஆண்டில் கையொப்பம் இட்டது. அதன்பின்னர் மார்ச் 8 ஆம் தேதியை சர்வதேச பெண்கள் தினமாக கடைப்பிடிக்க வேண்டும் என தனது உறுப்பு நாடுகளை கேட்டுக் கொண்டது. 1946ஆம் ஆண்டுமுதல் மார்ச் 8 அன்று உலகம் முழுவதும் சர்வதேச பெண்கள் தினம் கொண்டாடப்படுகிறது.
2.நியூயார்க் பங்குச் சந்தை நிறுவன மயப்படுத்தப்பட்ட நாள் 08 மார்ச் 1817.

 

– தென்னகம்.காம் செய்தி குழு