தமிழகம்

1.தமிழக முதல்வரின் கூடுதல் முதன்மைச் செயலராக இருந்த சாந்த ஷீலா நாயர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.


இந்தியா

1.ரூ.2.5 லட்சம் வரை வங்கியில் டெபாசிட் செய்தவர்களிடம் விசாரணை கிடையாது என்று மத்திய நேரடி வரிகள் வாரிய தலைவர் சுஷில் சந்திரா தெரிவித்துள்ளார்.
2.செல்லிடப் பேசி சந்தாதாரர்களின் அடையாளத்தை சரிபார்ப்பதற்கு ஓராண்டுக்குள் நடைமுறையை உருவாக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கடந்த பிப்ரவரி 6-ஆம் தேதி உத்தரவு பிறப்பித்துள்ளது.
3.உத்தரப் பிரதேச மாநிலத்தில் ஆஸம்கர் மாவட்டத்தில் உள்ள தக்வா கிராமத்தைச் சேர்ந்த நிஜாமுதீன் கடந்த பிப்ரவரி 6-ஆம் தேதி உயிரிழந்தார்.இவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் வாகன ஓட்டுநராகவும், அவரது இந்திய தேசிய ராணுவத்தில் கர்னலாக இருந்தது குறிப்பிடத்தக்கது.


உலகம்

1.இங்கிலாந்து ராணியாக எலிசபெத் முடிசூடி 65 ஆண்டுகள் கடந்துள்ளது.இவர் 1952-ம் ஆண்டு பட்டத்து ராணி ஆக முடிசூட்டப்பட்டார்.தற்போது இவருக்கு 90 வயது ஆகிறது.மேலும் இவர் உலகிலேயே அதிக நாள் ராணி ஆக இருந்தவர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.


வர்த்தகம்

1.டாடா சன்ஸ் குழும பங்குதாரர்கள் அளித்த வாக்குகளின் அடிப்படையில் அக்குழுமத்தின் இயக்குநர் பதவியில் இருந்து சைரஸ் மிஸ்திரி நீக்கப்பட்டுள்ளார்.


விளையாட்டு

1.ஆப்ரிக்க கோப்பைக்கான கால்பந்து போட்டி லிப்ரேவில்லி நகரில் நடைபெற்றது.இதில் இறுதி ஆட்டத்தில் கேமரூன் அணி  2-1 என்ற கோல்கணக்கில் எகிப்தை தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.


இன்றைய தினம்

1.இன்று டிமிட்ரி மெண்டெலீவ் பிறந்த தினம் (Dmitry Mendeleev Birth Anniversary Day).
கனிம அட்டவணையின் தந்தை என மெண்டெலீவ் அழைக்கப்படுகிறார். இவர் 1834ஆம் ஆண்டு பிப்ரவரி 8ஆம் நாள் ரஷ்யாவில் பிறந்தார். இவர் வேதியியல் தனிமங்களை அவற்றின் பண்புகளின் அடிப்படையில் வரிசைப்படுத்தாமல், தனிமங்களின் அணு நிறையை அடிப்படையாகக்கொண்டு ஆவர்த்தன அட்டவணையை உருவாக்கினார். இதனை மார்ச் 6, 1869இல் ரஷ்ய வேதியியல் கழகத்தில் சமர்ப்பித்தார்.
2.ஐக்கிய அமெரிக்காவில் மரண தண்டனைகளுக்கு முதற் தடவையாக நச்சு வாயுவை பயன்படுத்தும் முறை நெவாடாவில் அறிமுகப்படுத்தப்பட்ட நாள் 08 பிப்ரவரி 1924.
3.இலங்கையில் சிங்களம் மட்டும் சட்டம் களனி மாநாட்டில் அறிவிக்கப்பட்ட நாள் 08 பிப்ரவரி 1956.
4.நாஸ்டாக் பங்குச்சந்தைக் குறியீடு அறிமுகப்படுத்தப்பட்ட நாள் 08 பிப்ரவரி 1971.

 

– தென்னகம்.காம் செய்தி குழு