Current-Affairs-Updates

தமிழகம்

1.கரூரைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் கரூர் வைஸ்யா வங்கி (கேவிபி),தனியார் வங்கிகளில் சிறப்பான வங்கியாக செயல்பட்டு வருகிறது என்று டன் அண்ட் பிராட்ஸ்டிரீட் நிறுவனம் விருது அளித்து கவுரவித்துள்ளது.

இந்தியா

1.இன்று இரவு 12 மணி முதல் 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என பிதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.
2.கர்நாடக அரசுக்குச் சொந்தமான சந்தைப்படுத்தல், தொடர்பு மற்றும் விளம்பர நிறுவனத்தின் தலைவராக தமிழரான ரகுதேவராஜ் நியமிக்கப்பட்டுள்ளார்.

உலகம்

1.ஜப்பானுக்கு பிரதமர் மோடி வரும் 11, 12 ஆகிய தேதிகளில் பயணம் மேற்கொள்ளவுள்ளார். அப்போது,இந்தியாவுக்கும், ஜப்பானுக்கும் இடையே அணுசக்தி ஒப்பந்தம் வரும் 11-ஆம் தேதி கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2.ஐ.நா. பொதுச் சபையின் நிதிநிலை தொடர்பான ஆலோசனைக் குழுவின் உறுப்பினராக இந்தியரான மகேஷ் குமார் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.இவருடன் ஜப்பானின் தகேஷி அகமட்சு மற்றும் சீனாவின் யி ஸியுனாங் ஆகியோரும் ஆலோசனைக் குழுவில் இடம் பிடித்துள்ளனர்.

விளையாட்டு

1.சிங்கப்பூரில் நடைபெற்று வரும் காமன்வெல்த் மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் கடந்த நவம்பர் 6ம் தேதி ஒரே நாளில் 8 தங்கம் மற்றும் 8 வெள்ளிப் பதக்கங்களை இந்திய வீரர்கள் வென்றுள்ளனர்.ஹர்ஃபுல் (61 கிலோ), பஜ்ரங் (65 கிலோ), ஜிதேந்தர் (74 கிலோ), தீபக் (86 கிலோ), ஹிதேந்தர் (125 கிலோ) ஆகியோர் ஃபிரீஸ்டைல் பிரிவில் தங்கப் பதக்கங்களை கைப்பற்றினர்.கிரேக்கோ ரோமன் பிரிவில், ரவீந்தர் (59 கிலோ), தீபக் (71 கிலோ), ஹர்தீப் (98 கிலோ) ஆகியோர் தங்கப் பதக்கங்களை கைப்பற்றினர்.விகாஸ் (61 கிலோ), ராகுல் மான் (65 கிலோ), சந்தீப் கேட் (74 கிலோ), அருண் (86 கிலோ), கிருஷண் (125 கிலோ) ஆகியோர் ஃப்ரீஸ்டைல் பிரிவில் வெள்ளிப் பதக்கங்களை கைப்பற்றினர்.கிருஷண் (59 கிலோ), ரஃபிக் (71 கிலோ), சச்சின் (98 கிலோ) ஆகியோர் கிரேக்கோ ரோமன் பிரிவில் வெள்ளிப் பதக்கங்களை கைப்பற்றினர்.