இந்தியா

1.மத்தியபிரதேசத்தின் போபால் நகரில், சர்வதேச திறன் பூங்கா அமைப்பதற்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.
2.செல்பி ஸ்டிக்குகளை இந்திய அருங்காட்சியகங்களுக்குள் பார்வையாளர்கள் இனி எடுத்துச் செல்வதற்கு இந்திய தொல்லியல் துறை தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.


விளையாட்டு

1.ஜெர்மனியின் Nuremberg நகரில் நடைபெற்ற FIA பார்முலா 3 ஐரோப்பிய சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் ஜெஹன் தருவலா [Jehan Daruvala] பட்டம் வென்று சாதனை படைத்துள்ளார்.பார்முலா 3 ஐரோப்பிய கார் பந்தயத்தில் பட்டம் வென்ற முதல் இந்திய வீரர் என்ற பெருமையை ஜெஹன் தருவலா அடைந்துள்ளார். இவர் Sahara Force India Academy சார்பில் இந்த போட்டியில் கலந்துகொண்டுள்ளார்.
2.ஆஸ்திரேலிய ஓபன் டேபிள் டென்னிஸ் போட்டி கோல்டுகோஸ்ட் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் பெண்கள் இரட்டையர் பிரிவில் அரைஇறுதியில் இந்தியாவின் சுதிர்தா முகர்ஜி-பூஜா ஜோடி 4-11, 6-11, 2-11 என்ற நேர்செட்டில் சீனாவின் சென் மெங்-சு யுலிங் ஜோடியிடம் தோல்வியடைந்தது.இதனால் இந்திய மகளிர் அணி வெண்கலப்பதக்கத்தை கைப்பற்றியது.
3.சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ள ஃபிபா கால்பந்து தரவரிசை பட்டியலில் இந்திய அணி 96வது இடம் பெற்றுள்ளது.கடந்த 1996ல் இந்திய அணி 94வது இடத்தைப் பிடித்தது. இதற்குப் பிறகு, இந்திய அணியின் சிறந்த முன்னேற்றம் இதுவாகும்.


இன்றைய தினம்

1.497-வாஸ்கோடகாமாவின் இந்தியாவுக்கான முதல் நேரடிப் பயணம் தொடக்கம்.
2.1889-வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் முதலாவது இதழ் வெளியானது.


GST சிறப்பு செய்திகள் :

1.GST அமைப்பை அசிம் தாஸ் குப்தா குழு வடிவமைத்துள்ளது.
2.GST வரி அமைப்பை அமல்படுத்த விஜய் கேல்கர் குழு பரிந்துரைத்துள்ளது.
3.GSTன் படி வரி வசூலிக்கும் அதிகாரம் 246A சரத்தில் கூறப்பட்டுள்ளது.
4.தற்போது இந்தியாவில் உள்ள GST இரட்டை வரி அமைப்பு கனடா நாட்டு மாதிரியை பின்பற்றுகிறது.
5.GST சட்டத்திருத்த மசோதா பாரளுமன்றத்தில் முதன் முதலாக மார்ச் 22,2011-ல் அறிமுகப்படுத்தப்பட்டது.
6.GST இந்தியாவில் அறிமுகப்படுத்திய நாள் 01 ஜூலை 2017.

 

– தென்னகம்.காம் செய்தி குழு