தமிழகம்

1.தமிழகத்தில் முதன்முறையாக மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானம் அருகே தாமரை தொட்டி அருகே  மாற்றுத்திறன் குழந்தைகள் பூங்கா ரூ.40 லட்சத்தில் பிரத்யேக வசதிகளுடன் வடிவைக்கப்பட்டு வருகிறது.


இந்தியா

1.தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணையம் (Trai) அலைபேசி குரல் அழைப்பின் தரத்தை அறிய MyCall என்ற செயலியையும்,தேவையற்ற அழைப்பை கட்டுப்படுத்த Do Not Disturb 2.0 என்ற செயலியை அறிமுகம் செய்துள்ளது.ஏற்கனவே இணைய வேகத்தை அறிய MySpeed என்ற செயலி பயன்பாட்டில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
2.The Ministry of Utmost Happiness என்ற புத்தகத்தை அருந்ததி ராய் எழுதியுள்ளார்.


உலகம்

1.நேபாளத்தின் புதிய பிரதமராக, நேபாள காங்கிரஸ் கட்சியின் ஷெர் பகதூர் தூபா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
2.மாதம் ஒருமுறை மட்டும் ஊசி போடும் வகையில் நீரிழிவு நோயை கட்டுப்படுத்த புதிய மருந்து கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.அமெரிக்காவில் உள்ள டியூக் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் இந்த மருந்தை  கண்டுபிடித்துள்ளனர்.


இன்றைய தினம்

1.இன்று உலகப் பெருங்கடல் தினம் (World Ocean Day).
சுற்றுச்சூழல் பாதிப்பால் கடலும் பாதிப்படைகிறது. இதனால் கடலில் வாழும் உயிரினங்களும் அழிகின்றன. கடல்வாழ் உயிரினங்களைப் பாதுகாக்கவும், கடல் உணவுகள் பற்றி அறியவும், பெருங்கடலுக்கு மரியாதை செலுத்தவும் உலகப் பெருங்கடல் தினம் கொண்டாடப்படுகிறது. 1992ஆம் ஆண்டு, ஜூன் 8 அன்று பூமியைப் பாதுகாப்போம் என்கிற உடன்படிக்கை உருவானது. அன்றைய தினத்தை உலகப் பெருங்கடல் தினமாகக் கொண்டாடுகிறோம்.
2.படிவ நிரலாக்க மொழி பி.எச்.பி வெளியிடப்பட்ட நாள் 08 ஜூன் 1995.

 

– தென்னகம்.காம் செய்தி குழு