இந்தியா

1.தெலுங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர் ராவ்  வருட வருமானம் 2 லட்சத்திற்கு உட்பட்ட குடும்பத்தின் ஏழை பெண்களுக்கும் , ஆதரவற்ற பெண்களுக்கும் மாதம் ரூ 1000 உதவித்தொகை வழங்கும் ” ஜீவன் ஜோதி ” என்னும் புதிய திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார்.
2.14வது வெளிநாடு வாழ் இந்தியர்கள் மாநாடு பெங்களூருவில் ஜனவரி 07 முதல் 09 வரை நடைபெறுகிறது.இந்த மாநாட்டின் கருப்பொருள் — Redefining Engagement with the Indian Diaspora வாகும்.
3.பிரபல பாலிவுட் நடிகர் ஓம் புரி, திடீர் உடல்நலக் குறைவால் காலமானார்.இவர் அரோஹன் மற்றும் அர்த்சத்யா ஆகிய படங்களில் நடித்ததற்காக இரண்டு முறை தேசிய விருது வென்றுள்ளார். 1990ல் பத்மஶ்ரீ பெற்றுள்ளார்.
4.வணிக ரீதியிலான மேல்முறையீட்டு நடைமுறைகளை மறுசீராய்வு செய்வதற்கு ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி B.N. ஶ்ரீகிருஷ்ணா தலைமையிலான குழுவை மத்திய அரசு நியமித்துள்ளது.
5.தெற்கு ரயில்வேயில் முதன் முறையாக சூரிய சக்தி தகடுகள் பொருத்தப்பட்ட ரயில் பெட்டி கோவை – மயிலாடுதுறை ஜன சதாப்தி ரயிலில் இணைக்கப்பட்டுள்ளது.16 சூரிய சக்தி தகடுகள் மூலம் 4.8 கிலோவாட் மின்சாரம் தயாரிக்கலாம். இந்த ரயிலில் 36 தகடுகள் பொருத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
6.வெளிநாடுவாழ் இந்தியர்கள் (என்ஆர்ஐ) ஜூன் 30-ஆம் தேதி வரை பழைய ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கிகளில் செலுத்தி புதிய ரூபாய் நோட்டுகளை பெற்றுக் கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.


உலகம்

1.“பெட்டர் மேக் ரூம்’ எனப்படும் உயர் கல்வி விழிப்புணர்வு பிரசாரக் குழு உறுப்பினராக அமெரிக்கவாழ் தமிழ்ப் பெண் ஸ்வேதா பிரபாகரனை அந்நாட்டு அதிபர் ஒபாமாவின் மனைவி மிச்செல் தேர்வு செய்துள்ளார்.17 பேர் கொண்ட அந்தக் குழுவில் இடம்பெற்றிருக்கும் ஒரே இந்திய வம்சாவளிப் பெண் இவர் மட்டுமே.


விளையாட்டு

1.ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேனில் நடைபெற்ற பிரிஸ்பேன் சர்வதேச டென்னிஸ் தொடரில் இந்தியாவின் சானியா மிர்ஸா மற்றும் அமெரிக்க வீராங்கனையான பெத்தானி மாடேக் இணை சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியுள்ளது.இந்த இணை ரஷ்ய வீராங்கனைகளான மகரோவா மற்றும் எலெனா இணையை 6-2, 6-3 என்ற செட் கணக்கில் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது.அதே நேரத்தில் புள்ளிகள் அடிப்படையில் முதலிடத்தை சானியா இணை இழந்துள்ளது.தற்போது முதலிடத்தை அமெரிக்காவின் பெதானி மேடக் சான்ட்ஸ் பெற்றுள்ளார்.


இன்றைய தினம்

1.இன்று ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் நிறுவன தினம் (African National Congress Foundation Day).
தென்னாப்பிரிக்க கருப்பு இன மக்களின் உரிமைகளுக்காகப் போராட தென்னாப்பிரிக்கப் பழங்குடியினரின் தேசிய காங்கிரஸ் 1912ஆம் ஆண்டு ஜனவரி 8 அன்று ஆரம்பிக்கப்பட்டது. இக்கட்சியின் முதலாவது தலைவர் சோல் பிளாட்ஜி. இக்கட்சியின் பெயர் 1923ஆம் ஆண்டில் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் என்று மாற்றப்பட்டது. இது தற்போது தென்னாப்பிரிக்காவின் ஆளும் கட்சியாக உள்ளது.
2.சோவியத் ஒன்றியத்தின் லூனா 21 விண்கலம் விண்ணுக்கு செலுத்தப்பட்ட நாள் 08 டிசம்பர் 1973.
3.அல்பிரட் வெயில் புள்ளிகளையும் கோடுகளையும் கொண்ட தொலைத்தந்தியை அறிமுகப்படுத்திய நாள் 08 டிசம்பர் 1838.
4.வாஷிங்டன், டிசியில் ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் முதன்முறையாக வாக்களிக்க அனுமதிக்கப்பட்ட நாள் 08 டிசம்பர் 1867.

 

– தென்னகம்.காம் செய்தி குழு