current2

இந்தியா

1.ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் இருந்து கால நிலையை மேலும் துல்லியமாக கணிக்கக் கூடிய உயர் தொழில்நுட்ப இன்சாட் 3டிஆர் செயற்கைக் கோள் ஜி.எஸ்.எல்.வி. எப்-05 ராக்கெட் மூலம் இன்று விண்ணில் செலுத்தப்பட்டது இந்த செயற்கைக் கோள் இந்தியா மட்டுமல்லாமல் வங்கதேசம், பூடான், மாலத்தீவு, நேபாளம், செஷல்ஸ் தீவு, இலங்கை, தான்சானியா ஆகிய நாடுகளின் பருவநிலை மாற்றங்களை தெரிவிக்கும். இந்த செயற்கைக் கோள் 10 ஆண்டுகள் ஆயுட்காலம் கொண்டது.
2.மக்களவை நடவடிக்கைகளில் எம்.பி.க்கள் பங்கேற்காதது தொடர்பான விவகாரத்தை விசாரிக்கும் குழுவின் தலைவராக பி.கருணாகரன் நியமிக்கப்பட்டுள்ளார்.அரசு அளிக்கும் வாக்குறுதிகள் தொடர்பான குழுவின் தலைவராக ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க் நியமிக்கப்பட்டுள்ளார்.மக்களவை உரிமை மீறல் குழுவின் உறுப்பினராக ராம்சங்கர் நியமிக்கப்பட்டுள்ளார்.தனிநபர் மசோதா மற்றும்  திர்மானங்கள் தொடர்பான குழுவின் உறுப்பினராக பசுபாத் நாத் சிங் நியமிக்கப்பட்டுள்ளார்.மக்களவையின் நெறிகள் குழுவின் தலைவராக பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானியை மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜன் நியமித்துள்ளார்.
3.கர்நாடகாவின் பெல்லாரி மாவட்டம், ஹகேறிபொம்மனஹள்ளி ( Hagaribommanahalli ) தாலுகாவில் அமைந்துள்ள, அங்கசமுத்ரா குளத்தை ( Ankasamudra tank ) பறவைகள் சரணாலயமாக கர்நாடகா முதல்வர் அறிவித்துள்ளார்.
4.டெல்லி முதல்வர் கேஜ்ரிவால் தலைமையிலான அரசின் கடந்த ஒன்றரை ஆண்டு ஆட்சிக்காலத்தில் பிறப்பித்த உத்தரவுகளை ஆராய V.K. சுங்க்லு ( முன்னாள் Comptroller and Auditor General ), N. கோபால்சாமி ( முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் ),பிரதீப் குமார் ( முன்னாள் தலைமை கண்காணிப்பு ஆணையர் ) ஆகிய மூன்று பேர் கொண்ட குழுவை துணைநிலை ஆளுநர் நஜீப் ஜங் நியமித்துள்ளார்.
5.தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் நாட்டில் 40% ஆள் கடத்தல் சம்பவங்கள் அசாம், மேற்கு வங்க மாநிலத்தில் நடப்பதாக தெரிவித்துள்ளது.ஆள் கடத்தல் சம்பவங்களில் தமிழகம் மூன்றாவது இடத்தில் இருக்கிறது.

உலகம்

1.இன்று உலக எழுத்தறிவு தினம் (International Literacy Day).

அனைவருக்கும் எழுத்தறிவு என்கிற வரலாற்றுச் சிறப்புமிக்க கோட்பாட்டை உலகளவில் யுனெஸ்கோ உருவாக்கியது. அதன் அடிப்படையில் உலக எழுத்தறிவு தினம் 1965ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்டது. கல்வியறிவின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியும், அனைவருக்கும் எழுத்தறிவை போதிக்க வேண்டும் என்கிற நோக்கத்துடன் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 8 அன்று இத்தினம் கொண்டாடப்படுகிறது.

விளையாட்டு

1.மாற்றுத் திறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக் போட்டிகள் பிரேசில் நாட்டின் ரியோ நகரில் நேற்று தொடங்கியது.இதில் மொத்தம் 162 நாடுகள் கலந்து கொள்கின்றன.மொத்தம் 23 விளையாட்டுகள் நடத்தப்படுகின்றன.அதில் 528  போட்டிகள் நடத்தப்படுகின்றன.இந்தியா சார்பில் 17 பேர் கலந்து கொள்கின்றனர்.