தமிழகம்

1.தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையாளராக மாலிக் பெரோஸ் கான் புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.அவர் இன்று தனது பொறுப்புகளை ஏற்றுக் கொள்கிறார்.


இந்தியா

1.64-வது தேசிய திரைப்பட விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. இயக்குநர் பிரியதர்ஷன் தலைமையிலான குழு இந்த விருதுகளை அறிவித்தது.சிறந்த தமிழ் படமாக ஜோக்கர் திரைப்படம் தேர்வு செய்யப்பட்டது.சிறந்த பாடலாசிரியராக வைரமுத்து தேர்வு செய்யப்பட்டார்.தர்மதுரை படத்தில் “எந்த பக்கம்” என்ற பாடலுக்காக இந்த விருது இவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.சிறந்த ஒளிப்பதிவாளர்  மற்றும் தயாரிப்பு வடிவமைப்பு ஆகியவற்றிற்கான விருது 24″ படத்திற்கு  அறிவிக்கப்பட்டுள்ளது.சிறந்த கதையாசிரியாக ஜி.தனஞ்செயன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.சிறந்த நடிகருக்கான தேசிய விருது “ருஷ்டம்” படத்திற்காக  அக்ஷ்ய் குமாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.சிறந்த இந்தி படமாக நீரஜ் படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
2.ஜெர்மனி நாட்டிற்கான புதிய இந்திய தூதராக முக்தா தத்தா டோமரை மத்திய அரசு  நியமனம் செய்துள்ளது.
3.எதிரிநாடுகளின் ஏவுகணைத் தாக்குதலில் இருந்து நமது நாட்டை பாதுகாக்கும் வல்லமை கொண்ட நவீன ஏவுகணை பாதுகாப்புச் சாதனத்தை இஸ்ரேலிடம் இருந்து இந்தியா வாங்க உள்ளது.இதற்காக இஸ்ரேல், இந்தியா இடையே சுமார் ரூ.13 ஆயிரம் கோடி மதிப்பில் 2 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.


இன்றைய தினம்

1.முதலாவது உலக கண்காட்சி பாரிஸ் நகரில் ஆரம்பமான நாள் 08 ஏப்ரல் 1867.
2.மார்த்தா பிளேஸ் என்பவர் மின் இருக்கையில் மரண தண்டனை பெற்ற முதற்பெண்.அவர் மரண தண்டனை பெற்ற நாள் 08 ஏப்ரல் 1899.

 

– தென்னகம்.காம் செய்தி குழு