இந்தியா

1.இறப்பு பதிவுக்கு ஆதார் எண் கட்டாயமில்லை என்று மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.


உலகம்

1.வடகொரியா மீது விதிக்கப்பட்ட அமெரிக்காவின் புதிய பொருளாதாரத் தடைக்கு ஐ.நா ஒப்புதல் வழங்கியுள்ளது.


விளையாட்டு

1.இலங்கையில் கொழும்புவில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கையை இன்னிங்ஸ் மற்றும் 53 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்திய அணி தொடரை கைப்பற்றியது.ஜடேஜா ஆட்ட நாயகன் விருது பெற்றார்.
2.லண்டனில் நடைபெற்று வரும் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 100 மீட்டர் ஓட்டத்தில் அமெரிக்க வீராங்கனை டோரி போவி 10.85 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து தங்க பதக்கத்தை கைப்பற்றினார்.ஐவரிகோஸ்ட் வீராங்கனை மேரி ஜோசி தாலு வெள்ளி பதக்கத்தையும்,நெதர்லாந்து வீராங்கனை டாபைன் ஸ்சிப்பெர்ஸ் வெண்கல பதக்கத்தையும் கைப்பற்றினார்கள்.ஆண்களுக்கான குண்டு எறிதல் போட்டியில் நியூசிலாந்து வீரர் தாமஸ் வால்ஷ் 22.03 மீட்டர் தூரம் வீசி தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார்.அமெரிக்காவின் ஜோ கோவாச் வெள்ளி பதக்கத்தையும்,குரோஷியா வீரர் ஸ்டிப் சுனிச் வெண்கல பதக்கத்தையும் கைப்பற்றினார்கள்.


இன்றைய தினம்

1.இன்று உலக பூனை தினம் (World Cat Day).
பூனைகள் உலகின் அனைத்து இடங்களிலும் மனிதனால் பழக்கப்பட்டு வீடுகளில் வளர்க்கப்படுகின்றன. மனிதனிடம் சுமார் 9500 ஆண்டுகளாக வாழ்கின்றன. சிறந்த இரவுப் பார்வையும், சிறந்த கேட்கும் திறனும் கொண்டவை. அதிக விளையாட்டுத்திறன் கொண்டுள்ளது. பூனையால் இனிப்புச் சுவையை உணர முடியாது. உலக பூனை தினம் முதன்முதலாக 2014ஆம் ஆண்டில் துவங்கியது.
2.1942 – இந்திய காங்கிரஸ் பம்பாயில் கூட்டிய மாநாட்டில் வெள்ளையனே வெளியேறு என்னும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
3.1947 – பாகிஸ்தானின் தேசியக் கொடி அங்கீகாரம் பெற்றது.
4.1967 – ஆசியான் அமைப்பு உருவாக்கப்பட்டது.

 

– தென்னகம்.காம் செய்தி குழு