current-affairs

இந்தியா

1.இந்திய காங்கிரஸ் பம்பாயில் கூட்டிய மாநாட்டில் வெள்ளையனே வெளியேறு என்னும் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நாள் 08 ஆகஸ்டு 1942.
2.குஜராத் புதிய முதல்வராக விஜய் ருபானியும், துணை முதல்வராக நிதின் பட்டேலும் நேற்று காந்தி நகரில் பதவியேற்றுக் கொண்டனர்.
3.புதிதாக 300 “அம்ரித்’ மருந்தகங்களை இந்த ஆண்டு இறுதிக்குள் திறக்கத் திட்டமிட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி.நட்டா தெரிவித்தார்.இதன் மூலம்  உயிர் காக்கும் மருந்துகள் குறைந்த விலையில் மக்களுக்கு கிடைக்கும்.

உலகம்

1.பாகிஸ்தானின் தேசியக் கொடி அங்கீகாரம் பெற்ற நாள் 08 ஆகஸ்டு 1947.
2.இன்று உலக பூனை தினம்(World Cat Day).பூனைகள் உலகின் அனைத்து இடங்களிலும் மனிதனால் பழக்கப்பட்டு வீடுகளில் வளர்க்கப்படுகின்றன. மனிதனிடம் சுமார் 9500 ஆண்டுகளாக வாழ்கின்றன. சிறந்த இரவுப் பார்வையும், சிறந்த கேட்கும் திறனும் கொண்டவை. அதிக விளையாட்டுத்திறன் கொண்டுள்ளது. பூனையால் இனிப்புச் சுவையை உணர முடியாது. உலக பூனை தினம் முதன்முதலாக 2014ஆம் ஆண்டில் துவங்கியது.

விளையாட்டு

1.ரியோ ஒலிம்பிக் மகளிர் 4ல100 மீ. ஃப்ரீஸ்டைல் நீச்சல் போட்டியில் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த எம்மா மெக்கன், பிரிட்டானி எல்ம்ஸிலி, பிரான்ட் கேம்ப்பெல், கேட் கேம்ப்பெல் ஆகியோர் உலக சாதனையோடு தங்கப் பதக்கம் வென்றனர்.ஆஸ்திரேலிய அணி 3 நிமிடம், 30.65 விநாடிகளில் இலக்கை எட்டியது.இதற்கு முன்னர் 3 நிமிடம், 30.98 விநாடிகளில் இலக்கை எட்டியதே உலக சாதனையாக இருந்தது.
2.ரியோ டி ஜெனீரோவில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள பாரா ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க ரஷிய பாரா ஒலிம்பிக் அணிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.சர்வதேச நடுவர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் என ரஷியா தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.