நடப்பு நிகழ்வுகள் – 07 மே 2017
தமிழகம்
1.தமிழகத்தில் மீன்பிடி தடைகாலம் 45 நாளிலிருந்து 61 நாட்களாக உயர்த்தப்படுகிறது என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
இந்தியா
1.பாகிஸ்தான் தவிர்த்த தெற்காசிய நாடுகளின் தகவல் தொடர்பு, பேரிடர் முன்னெச்சரிக்கை ஆகியவற்றிற்காக இந்தியா உருவாக்கிய GSat – 9 செயற்கைகோள் ,GSLV F – 9 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டா 2வது ஏவுதளத்தில் இருந்து கடந்த மே 5-ம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது.இதன் ஆயுட்காலம் – 12 ஆண்டுகள்,
GSLV வரிசையில் இது 11வது ஆகும்.உள்நாட்டு கிரையோஜெனிக் தொழில்நுட்பத்தில் இயக்கப்பட்ட 4வது ராக்கெட் இதுவாகும்.
2.வாராக்கடன்களை வசூலிக்க ரிசர்வ் வங்கிக்கு கூடுதல் அதிகாரம் வழங்கும் அவசர சட்டத்துக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஒப்புதல் வழங்கியுள்ளார்.
இன்றைய தினம்
1.சோனி நிறுவனம் 20 தொழிலாளர்களுடன் டோக்கியோவில் ஆரம்பிக்கப்பட்ட நாள் 07 மே 1946.
2.ஐரோப்பியப் பேரவை உருவாக்கப்பட்ட நாள் 07 மே 1948.
– தென்னகம்.காம் செய்தி குழு