இந்தியா

1.வாடிக்கையாளர் கணக்கில் குறைந்தபட்ச தொகை இருப்பு இல்லையெனில், அவரிடம் வரும் ஏப்ரல் மாதம் 1-ஆம் தேதி முதல் கட்டணம் வசூலிப்பதென்று பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) தெரிவித்துள்ளது.
2.மத்திய சரக்கு-சேவை வரி விதிப்புச் சட்டம் (சிஜிஎஸ்டி), ஒருங்கிணைந்த சரக்கு-சேவை வரி விதிப்பு (ஐஜிஎஸ்டி) சட்டம் ஆகியவற்றுக்கு ஜிஎஸ்டி கவுன்சில் கடந்த மார்ச் 04-ஆம் தேதி ஒப்புதல் வழங்கியுள்ளது.
3.இமாச்சலப் பிரதேச மாநிலம் பக்லோ-வில் இந்தியா-ஓமன் இடையேயான ஒப்பந்தத்தின்படி இரு நாடுகளுக்கிடையேயான ராணுவ கூட்டுப்பயிற்சி நேற்று தொடங்கியது.இந்த பயிற்சிக்கு “அல் நாகா-2” என பெயரிடப்பட்டுள்ளது.இந்த பயிற்சி 14 நாட்கள் நடைபெற உள்ளது.
4.ஐதராபாத் சர்வதேச விமான நிலையம் பயணிகளுக்கு சிறந்த சேவையை வழங்குவதில் உலகளவில் முதல் இடத்தை பிடித்துள்ளது.அக்டோபர் மாதம் மொரிசியஸ் தலைநகர் போர்ட் லூயிசில் சர்வதேச விமான நிலைய கவுன்சிலின் 27-வது ஆண்டு பொது சபைக் கூட்டம், மாநாடு மற்றும் கண்காட்சியில் ஐதராபாத் சர்வதேச விமான நிலையத்துக்கு விமான நிலைய சேவைத் தர விருது வழங்கப்பட உள்ளது.
5.இங்கிலாந்து மற்றும் இந்தியாவில் 60 ஆண்டுகளாக சேவையாற்றிய ஐ.என்.எஸ். வீராட் கப்பல் நேற்று  கடற்படை பணியில் இருந்து ஓய்வு பெற்றது.இந்த ஐ.என்.எஸ். வீராட், இந்தியாவின் முதல் விமானம் தாங்கி போர்க்கப்பல் ஆகும்.
6.இந்திய ராணுவத்தில் இருந்து “இன்சாஸ்” துப்பாக்கி விடை பெற உள்ளது.அதற்கு பதிலாக அதிக சக்திவாய்ந்த “இன்சாஸ்” வெளிநாட்டு துப்பாக்கி அறிமுகப்படுத்தப்பட உள்ளது.இதற்கான முடிவை ராணுவ அமைச்சகம் எடுத்துள்ளது.


விளையாட்டு

1.மெக்ஸிகோவின் அகாபுல்கோ நகரில் நடைபெற்ற மெக்ஸிகோ ஓபன் டென்னிஸ் போட்டியில் அமெரிக்காவின் சாம் கியூரி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.இவர் இறுதிப்போட்டியில் 6-3, 7-6 (3) என்ற நேர் செட்களில் ஸ்பெயினின் ரஃபேல் நடாலைத் தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.


இன்றைய தினம்

1.அலெக்சாண்டர் கிரகம் பெல் தொலைபேசிக்கான காப்புரிமம் பெற்ற நாள் 07 மார்ச் 1876.
2.கோல்டா மெயிர்  இஸ்ரேலின் முதற் பெண் பிரதமரான நாள் 07 மார்ச் 1969.

 

– தென்னகம்.காம் செய்தி குழு