தமிழகம்

1.தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் முதல்வர் பதவியிலிருந்து ராஜினாமா செய்துள்ளார்.தனது விலகல் கடிதத்தை பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவுக்கு ஓ.பன்னீர் செல்வம் அனுப்பி வைத்துள்ளார்.தான் தனிப்பட்ட காரணங்களுக்காகவே தனது பதவியை ராஜினாமா செய்வதாக ஓ. பன்னீர்செல்வம் குறிப்பிட்டுள்ளார்.


இந்தியா

1.உத்திர பிரதேசத்தில் சட்டமன்ற தேர்தலில் 46 சட்டசபை தொகுதிகளின் வாக்களர் பட்டியல் உருது மொழியிலும் தயார் செய்யப்பட்டுள்ளது. இந்த தொகுதிகளில் உருது பேசும் மக்கள் பெரும்பான்மையாக வசித்து வருகின்றனர்.இந்தியாவில் இதுபோன்று உருது மொழியில் வாக்களர் பட்டியல் வெளியிடப்படுவது இதுவே முதல் முறை ஆகும்.
2.2015 செப்டம்பர் 28ல் PSLV -XL ராக்கெட் மூலம் ஏவப்பட்ட  இந்தியாவின் முதல் விண்வெளி ஆய்வு செயற்கைகோள் ஆஸ்ட்ரோசாட் (Astrosat) 600 கோடி வயதான Blue Straggler என்ற நட்சத்திரத்தை படம் பிடித்துள்ளது.இந்த நட்சத்திரம் அழியும் நிலையில் உள்ள பெரிய நட்சத்திரத்தில் இருந்து நிறை மற்றும் ஆற்றலை (Mass & Energy) உறுஞ்சும் திறன் கொண்டது. அவ்வாறு உறிஞ்சும் பொழுது ஆஸ்ட்ரோசாட் படம் பிடித்துள்ளது.


விளையாட்டு

1.இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் அலாஸ்டர் குக் தனது பதவியை ராஜினாமா  செய்துள்ளார்.மேலும் டெஸ்ட் போட்டியில் தொடர்ந்து விளையாட விரும்புவதாக அவர் அறிவித்துள்ளார்.
2.ஹாங்காங்கில் நடைபெற்ற ஆசிய ஜூனியர் ஸ்குவாஷ் போட்டியில் இந்திய அணி தங்கப் பதக்கம் வென்றது.இந்திய அணி இறுதி ஆட்டத்தில் 2-0 என்ற கணக்கில் மலேசியாவை தோற்கடித்து சாம்பியன் பட்டம் வென்றது.இந்திய அணி தரப்பில் முதல் போட்டியில் வேலவன் செந்தில்குமார், மலேசிய வீரர் ஓங் சாய் ஹுன்னை வீழ்த்தினார்.அடுத்த போட்டியில் இந்தியாவின் அபய் சிங் மலேசிய வீரர் டாரன் ராகுலை வென்றார். இறுதியில் 2-0 என்ற கணக்கில் மலேசியாவை தோற்கடித்து சாம்பியன் பட்டம் வென்றது.


இன்றைய தினம்

1.சுவிட்சர்லாந்தில் பெண்களுக்கு வாக்குரிமை கிடைத்த நாள் 07 பிப்ரவரி 1971.
2.சார்லி சாப்ளினின் முதல் திரைப்படம் Kid Auto Races at Venice வெளியான நாள் 07 பிப்ரவரி 1914.
3.சோவியத் ஒன்றியம் சோயுஸ் 24 விண்கலத்தை இரண்டு விண்வெளி வீரர்களுடன் விண்ணுக்கு ஏவிய நாள் 07 பிப்ரவரி 1977.

– தென்னகம்.காம் செய்தி குழு