current-affairs

தமிழகம்

1.இன்று இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்ற சர் சி.வி.ராமன் பிறந்த தினம்.இவர் பிறந்த தேதி 07 நவம்பர் 1988.

இந்தியா

1.புதிய கண்டுபிடிப்புகளை அதிகரிக்க மற்றும் வேலை உருவாக்கத்தை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் தொடக்க நிறுவனங்களுக்கான ECB பாதையின் புதிய விதிகளின்படி, RBI-யானது ஒரு நிதியாண்டில் தொடக்க நிறுவனங்கள் அதிகபட்சம் $ 3 மில்லியன் நிதி வரை பெற அனுமதித்துள்ளது.  Financial Action Task Force (FATF) அல்லது FATF-Style Regional Bodies ஆகிய ஏதேனும் ஒன்றில் உறுப்பினராக உள்ள நாட்டிலிருந்து ECB பெற முடியும்.
2.சண்டிகரின் முதல் தலைமை கட்டிட கலைஞர் எம் என் சர்மா(93) சமீபத்தில் சண்டிகரில் காலமானார். இவர் சமீபத்தில் “Making of Chandigarh: Le Corbusier and After” என்ற புத்தகத்தை எழுதியுள்ளார்.சாதாரண மனிதனுக்கு ஏற்ற சிறந்த சூழலை உருவாக்கியதற்காக 1973-ல் Institute of Life (France) விருது உட்பட பல்வேறு தேசிய மற்றும் சர்வதேச விருதுகளை பெற்றுள்ளார்.
3.கேரள அரசு உச்ச நீதிமன்றத்தில் இன்று சபரிமலை ஸ்ரீஐயப்பன் கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கத்  தயார் என்று தெரிவித்துள்ளது.

உலகம்

1.ஜப்பான் தலைநகர் டோக்கியோவின் டோக்கியோ டோம் சிட்டி ஹாலில் பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த கெய்லி வெர்ஜோசா(Kylie Verzosa), மிஸ் இண்டர்நேசனல் 2016 ஆக  மகுடம் சூட்டப்பட்டார். மிஸ் இண்டர்நேசனல் பட்டம் பெறும் 6வது ஃபிலிப்பினோ இவர்.
2.1971 ஆம் ஆண்டு FIFA உலக கோப்பையின் கோப்பையை வடிவமைத்த மற்றும் உருவாக்கிய இத்தாலிய சிற்பி சில்வியோ காஸ்ஜானிகா(95)(Silvio Gazzaniga), சமீபத்தில் இத்தாலியின் மிலன் நகரில் காலமானார். மேலும் இவர் “Mr Cups ” என்றும் அழைக்கப்படுகிறார்.
3.இன்று மேரி கியூரி பிறந்த தினம்(Marie Gurie Birth Day).
மேரி கியூரி 1867ஆம் ஆண்டு நவம்பர் 7 அன்று போலந்து நாட்டில் பிறந்தார். இவர் ரேடியம், பொலோனியம் போன்ற கதிர்வீச்சு மூலகங்களைக் கண்டுபிடித்தார். இவர் இயற்பியலுக்கான நோபல் பரிசினை 1903ஆம் ஆண்டிலும், வேதியியலுக்கான நோபல் பரிசினை 1911ஆம் ஆண்டிலும் பெற்றார். உலகில் இரண்டு பரிசுகளைப் பெற்ற முதல் பெண்மணி இவரே ஆவார்.

விளையாட்டு

1.சமீபத்தில் ஐசிசி மகளிர் ODI பந்துவீச்சு தரவரிசையில் நம்பர் 1 இடத்தை இந்திய மகளிர் கிரிக்கெட் அணி கேப்டன் ஜுலன் கோஸ்வாமி பிடித்துள்ளார்.