current-affairs

தமிழகம்

1.மூத்த பத்திரிக்கையாளர் சோ.ராமசாமி(82),  இன்று காலை 5 மணி அளவில் காலமானார்.இவர் பத்திரிக்கை துறையின் சிறந்த சேவைக்காக 1985 இல் ‘மஹாரான மேவார்’ வழங்கிய ஹால்டி காட்டி விருதும், 1986 இல் வீரகேசரி விருதும், 1994 ஆம் ஆண்டு கொயங்கா விருதும், 1998 இல் நச்சிக்கேதஸ் விருதையும் பெற்றுள்ளார்.


இந்தியா

1.ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ்தவான் விண்வெளி நிலையத்தின் முதலாவது ஏவுதளத்தில் இருந்து இன்று காலை 10.43 மணிக்கு புவியை கண்காணிக்கும் ரிசோர்ஸ் சாட்-2ஏ செயற்கைக்கோள், பி.எஸ்.எல்.வி சி-36 ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
2.இந்த ஆண்டுக்கான சிறந்த ஆசியருக்கான சிங்கப்பூரின் ஸ்டிரெய்ட்ஸ் விருது, ஃபிளிப்கார்ட் நிறுவனர்களான சச்சின் பன்ஸால் மற்றும் பின்னி பன்ஸால் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது.
3.இன்னும் 2 மாதத்தில் திருப்பதியில் ரூ. 999 கட்டணத்தில் ஹெலிகாப்டர் சுற்றுலா தொடங்கப்பட உள்ளதாக சித்தூர் மாவட்ட ஆட்சியர் சித்தார்த் ஜென் தெரிவித்துள்ளார்.
4.பொதுமக்களிடம் நிதி திரட்டி கடந்த மூன்று ஆண்டுகளில் காணாமல் போன நிறுவனங்களின் எண்ணிக்கை 78 ஆக உயர்ந்துள்ளது.இதில் குஜராத் மாநிலம் முதலிடம் பிடித்துள்ளது.அந்த மாநிலத்தில் மட்டும் 17 நிறுவனங்கள் நிதி திரட்டி காணாமல் போயுள்ளன.இந்த வரிசையில் தமிழ்நாடு மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது.இங்கு 10 நிறுவனங்கள் நிதி திரட்டி காணாமல் போயுள்ளன.
5.புதிய 100 ரூபாய் நோட்டுகள் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது .


முக்கிய தினங்கள்/வாரங்கள்

1.இன்று சர்வதேச சிவில் விமானப் போக்குவரத்து தினம் (International Civil Aviation Day).
விமானங்கள் கண்டுபிடிக்கப்பட்டப்பிறகு பயணத்தின் நேரம் குறுகிப் போனது. தற்போது சர்வதேச அளவில் விமானப் போக்குவரத்து நடைபெறுகிறது. இதற்கான ஒரு அமைப்பு 1944இல் ஆரம்பிக்கப்பட்டு, அதன் 50 ஆவது ஆண்டு விழா 1994ஆம் ஆண்டில் கொண்டாடியது. இந்த அமைப்பின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்டு ஐ.நா. பொதுச்சபை டிசம்பர் 7 ஆம் தேதியை சர்வதேச சிவில் விமானப் போக்குவரத்து தினமாக அறிவித்தது.
2.அப்போலோ திட்டத்தின் கடைசி விண்கலம் “அப்போலோ 17” சந்திரனை நோக்கி ஏவப்பட்ட நாள் 07 டிசம்பர் 1972.
3.கலிலியோ விண்கலம் விண்ணுக்கு ஏவப்பட்டு 6 ஆண்டுகளின் பின்னர் வியாழனை அடைந்த நாள் 07 டிசம்பர் 1995.