இந்தியா

1.இந்தியா மற்றும் தாய்லாந்து ராணுவங்கள் இணைந்து மேற்கொள்ளும் பயிற்சி, மைத்ரி – 2017 , ஹிமாச்சல பிரதேசத்தின் Bakloh-ல் நடைபெறுகிறது.ஏற்கனவே மார்ச் மாதத்தில் இந்தியா – ஓமன் இணைந்து மேற்கொண்ட Al Nagah – II 2017 இதே இடத்தில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
2.தேசிய பேரிடர் மீட்பு படையின் ( National Disaster Response Force – NDRF) பொது இயக்குனராக சஞ்சய் குமார் IPS நியமிக்கப்பட்டுள்ளார்.ஏற்கனவே இப்பதவியில் இருந்துவந்த R.K. பச்நந்தா, இந்தோ – திபெத் எல்லை காவல் (ITBP) பிரிவின் தலைமை இயக்குனராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
3.ஜூன் 30 அன்று நடைபெற்ற சபர்மதி ஆசிரம நூற்றாண்டு விழா மற்றும் மகாத்மா காந்தியின் ஆன்மீக வழிகாட்டியான ஸ்ரீமத் ராஜ்சந்திராஜியின் 150வது பிறந்த தினத்தை முன்னிட்டு, ரூபாய் 5 மதிப்பிலான தபால்தலை மற்றும் தபால்உறை மேலும் ரூபாய் 150 , ரூபாய் 10 மதிப்பிலான நாணயங்களை பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ளார்.
4.andhi against caste என்ற புத்தகத்தை Nishkant Kolge என்பவர் எழுதியுள்ளார்.
5.Gandhi in Champaran என்ற புத்தகத்தை D.G.Tendulkar எழுதியுள்ளார்.


உலகம்

1.இஸ்ரேல் நாட்டுக்கு சென்ற பிரதமர் நரேந்திர மோடியை கவுரவிக்கும் வகையில், இஸ்ரேலி க்ரைசாந்துமன் என்ற மலருக்கு ‘மோடி’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.மேலும் இஸ்ரேல் நாட்டுக்கு சென்ற முதல் இந்திய பிரதமர் என்ற பெருமையை நரேந்திர மோடி பெற்றுள்ளார்.


இன்றைய தினம்

1.1896 – இந்தியாவில் முதற் தடவையாக பம்பாயில் திரைப்படம் அறிமுகப்படுத்தப்பட்டது.
2.2007 – புதிய ஏழு உலக அதிசயங்கள் பட்டியல் வெளியிடப்பட்டது. இந்தியாவின் தாஜ் மகால் புதிய 7 உலக அதிசயங்களில் ஒன்றாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது.

 

– தென்னகம்.காம் செய்தி குழு

.