Daily-Current-Affairs

தமிழகம்

1.அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்களுக்கு அடுத்ததாக மாணவர்களுக்கும் பயோ-மெட்ரிக் வருகைப்பதிவேடு அரசு பள்ளிகளில் முதல் முறையாக தமிழகத்தில் பெரம்பலூரில் அறிமுகப்படுத்தப்பட்டது.
2.கனடா நாட்டின் ‘தமிழ் இலக்கியத் தோட்டம்’ அமைப்பு வழங்கும் 2015ம் ஆண்டின் சிறந்த தொழில்நுட்ப வல்லுனருக்கான சர்வதேச விருதை மதுரை இளைஞர் ராஜாராமன் பெற்றுள்ளார்.
3.கோவை மாவட்ட புதிய கலெக்டராக ஹரிஹரன் நேற்று பதவி ஏற்றுக்கொண்டார்.

இந்தியா

1.இன்று நாடு முழுவதும் ரம்ஜான் பண்டிகையை இஸ்லாமியர்கள் உற்சாகத்துடன் கொண்டாடுகின்றனர்.
2.ஸ்ரீராமானுஜரின் 1,000-வது ஆண்டை முன்னிட்டு தெலங்கானா மாநிலம் ஷம்ஷாபாத் அருகே 216 அடி உயரத்துக்கு ராமானுஜரின் பிரம்மாண்ட ஐம்பொன் சிலை அமைக்கப்பட உள்ளது.
3.பெங்களூருவில் மாசுவை கட்டுப்படுத்த 100% பயோ டீசலில் இயங்கும் பஸ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
4.ஒடிசா மாநிலம், பூரியில் உள்ள கடற்கரையில், மணலாலான 100 ரதங்களை 20 மணிநேரத்தில் உருவாக்கி சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக் சாதனை படைத்தார்.இவர் லிம்கா உலக சாதனை புத்தகத்தில் மீண்டும் இடம்பிடித்துள்ளார்.இது அவரது 21ஆவது உலக சாதனையாகும்.
5.இந்தியாவில் 7 ஜூலை 1896-ம் ஆண்டு திரைப்படம் முதன் முதலாக அறிமுகப்படுத்தப்பட்டது. லுமியர் பிரதர்ஸ் சினிமட்டோகிரபி என்ற நிறுவனம் மும்பையில் (அப்போது பம்பாய்) இருந்த வாட்சன் விடுதியில் ஆறு சிறிய ஊமைப் படங்களைத் திரையிட்டது.

உலகம்

1.உலக அளவில் எவ்வித விபத்துக்களும் இன்றி மணிக்கு 2,205 கி.மீ வேகத்தில், 2,029 மணிநேரம் வெற்றிகரமாக பறந்து, தேஜாஸ் விமானம் சாதனை படைத்த போர் விமானம் ஆகும்.
2.07 ஜூலை 2007 ஆம் ஆண்டு  புதிய ஏழு உலக அதிசயங்கள் பட்டியல் வெளியிடப்பட்டது.இதில் இந்தியாவின் தாஜ் மகால் புதிய 7 உலக அதிசயங்களில் ஒன்றாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது.
3.இன்று சொலமன் தீவுகள் விடுதலை அடைந்த நாள்.விடுதலை அடைந்த தேதி 07 ஜூலை 1978.

விளையாட்டு

1.அர்ஜெண்டினாவின் பிரபல கால்பந்தாட்ட வீரர் லியோனல் மெஸ்சிக்கு வரி ஏய்ப்பு வழக்கு ஒன்றின் மீது ஸ்பெயின் நாட்டு நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.மெஸ்சிக்கு 21 மாத சிறை தண்டனையும், 2 மில்லியன் யூரோ அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. அவரின் தந்தைக்கும் 1.5 மில்லியன் யூரோவும், சிறை தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.சமீபத்தில் நடந்த கோபா அமெரிக்கா தொடரில் அர்ஜென்டினா தோற்ற நிலையில், கால்பந்தாட்டங்களில் இருந்து ஓய்வு பெறுவதாக மெஸ்ஸி அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
2.இன்று இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் மகேந்திர சிங் டோனியின் பிறந்த நாள்.இவர் பிறந்த தேதி 07 ஜூலை 1981.