இந்தியா

1.தெலுங்கானா மாநில அரசு குடும்ப உறுப்பினர்கள் துணையின்றி தனித்து வாழும் பெண்களுக்கு மாதம் ரூ. 1000/ ஓய்வூதியம் வழங்கும் திட்டத்தை துவக்கியுள்ளது.
2.ஜூன் 05 ல் விண்ணில் செலுத்தப்பட்ட GSLV Mark 3 செயற்கைகோளிற்கு , FAT BOY என இஸ்ரோ பெயர் சூட்டியுள்ளது.
3.கர்நாடகாவின் மைசூர் நகரில், இந்தியாவின் முதல் சைக்கிள் பகிர்வு திட்டம் Trin Trin துவங்கப்பட்டுள்ளது.
4.பசுக்களை கொல்பவர்களை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்ய , உத்தரபிரதேச காவல்துறை டிஜிபி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
5.அரசு சேவைகள் பெறுவதற்கு, அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுப்பவர்கள் இனி 1100 என்ற எண்ணுக்கு போன் செய்தால், கொடுத்த லஞ்சப் பணத்தை, அதிகாரிகள் திரும்ப கொண்டு வந்து தரும் புதிய திட்டம் ஆந்திராவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.


இன்றைய தினம்

1.மகாத்மா காந்தி தனது முதலாவது ஒத்துழையாமை இயக்கத்தை ஆரம்பித்த நாள் 07 ஜூன் 1893.

 

– தென்னகம்.காம் செய்தி குழு