தமிழகம்

1.சென்னை அமைந்தகரையில் 40-வது புத்தக கண்காட்சி நேற்று தொடங்கியது.கல்வித்துறை அமைச்சர் பாண்டியராஜன் இந்த புத்தக கண்காட்சியை தொடங்கி வைத்தார்.இந்த புத்தக கண்காட்சி நேற்று தொடங்கி வரும் 19–ந்தேதி வரை நடக்கிறது.
2.தி.மு.க. இளைஞர் அணி செயலாளர் பதவிக்கு தற்போது முன்னாள் அமைச்சர் வெள்ளக்கோவில் மு.பெ.சாமிநாதன் நியமிக்கப்பட்டுள்ளார்.


இந்தியா

1.புதிய வாக்காளர்களாக பதிவு செய்துள்ளவர்களுக்கு புதிய மென்பொருள் வழியாக வண்ண வாக்காளர் அட்டையை இலவசமாகப் பெறலாம் என்று தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார்.பழைய வாக்காளர்கள் வண்ண அடையாள அட்டையைக் கோரினால் ரூ.25 விலையில் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
2.நீதிபதிகள்  நியமனம் தொடர்பாக சர்ச்சைக்குரிய கருத்துக்களை தன்னுடைய முகநூல் பக்கத்தில் பதிவு செய்ததற்காக முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு உச்ச நீதிமன்ற அமர்வு முன்பாக நேற்று  நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார்.
3.நோ பார்கிங்கில் பார்க் செய்யப்பட்டுள்ள கார்களை புகைப்படம் எடுத்து அனுப்பினால் 100 ரூபாய் பரிசு அளிக்கப்படும் என மத்திய அரசின் போக்குவரத்து துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
4.திருமணமாகாமல் வீடுகளில் தனித்து வாழும் ஆதரவற்ற பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 பென்ஷன் வழங்கப்படும் என்று தெலுங்கானா முதலமைச்சர் சந்திர சேகர ராவ் தெரிவித்துள்ளார்.
5.பாரம்பரியத்தை மீறும் பெண்கள் சபரிமலை கோவிலுக்குள் நுழைய அனுமதிக்க மாட்டோம் என்று திருவாங்கூர் தேவசம் போர்டு தலைவர் பிரேயார் கோபால கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.


உலகம்

1.சீனாவில் மிக நீண்ட தூரத்துக்கு புல்லட் ரயில் சேவை கடந்த 05-ம் தேதி தொடங்கப்பட்டது.சீனாவின் குன்மிங் நகரிலிருந்து அந்நாட்டின் தலைநகர் பெய்ஜிங் வரை 2,760 கி.மீ. தொலைவுக்கு புல்லட் ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது.
2.அமெரிக்காவின் புதிய அதிபராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள டொனால்டு டிரம்ப், தனது துணை உதவியாளராகவும், தகவல் தொடர்பு மற்றும் ஆராய்ச்சி இயக்குநராகவும் இந்தியாவைப் பூர்விகமாகக் கொண்ட ராஜ் ஷா என்பவரை நியமித்துள்ளார்.
3.அமெரிக்க ராணுவத்தில் பணியாற்றும் சீக்கியர்களுக்கு மத சுதந்திரம் அளிக்கும் வகையில், அவர்கள் தலைப்பாகை அணியவும், தாடி வைத்துக் கொள்ளவும் சிறப்பு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.


இன்றைய தினம்

1.யாழ்ப்பாணத்தில் உதயதாரகை பத்திரிகை தமிழ், ஆங்கிலத்தில் ஆரம்பிக்கப்பட்ட நாள் 07 ஜனவரி 1841.
2.அட்லாண்டிக் பெருங்கடலைக் கடந்து முதலாவது தொலைபேசிச் செய்தி நியூயோர்க் நகருக்கும் லண்டனுக்கும் இடையில் அனுப்பப்பட்ட நாள் 07 ஜனவரி 1927.
3.அமெரிக்க அதிபர் ஹரி ட்ரூமன் ஐக்கிய அமெரிக்கா நைட்ரஜன் குண்டைத் தயாரித்திருப்பதாக அறிவித்த நாள் 07 ஜனவரி 1953.
4.பிடல் காஸ்ட்ரோவின் புதிய கியூபா அரசை அமெரிக்கா அங்கீகரித்த நாள் 07 ஜனவரி 1959.
5.நாசாவின் சேர்வயர் 7 விண்கலம் ஏவப்பட்ட நாள் 07 ஜனவரி 1968.

 

– தென்னகம்.காம் செய்தி குழு