current-affairs

தமிழகம்

1.சென்னை விமானநிலையம்(Chennai Airport )- சின்னமலை(Little Mount) இடையே மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் நேற்று நடைபெற்றது.இந்த வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சேவை அடுத்த மாதம் தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தியா

1.காவல் நிலையங்களில் எந்த ஒரு சம்பவம் குறித்தும் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டால் அதிலிருந்து 48 மணி நேரத்திற்குள் அது குறித்த தகவலை இணையத்தளத்தில் பதிவு செய்யப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.மேலும் மிகவும் முக்கியமான வழக்குகளில் 72 மணி நேரம் கால அவகாசம் வழங்கப்படும் எனவும் இந்த உத்தரவை அனைத்து மாநிலங்களும் பின்பற்ற வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
2.தேசிய ஊட்டச்சத்து வாரம் செப்டம்பர் 01 முதல் செப்டம்பர்  07 வரை கடைபிடிக்கப்படுகிறது.
3.மத்திய அரசுப் பணியில் இருப்பவர்கள் பணிக் காலத்தின்போது ஊழியர் ஒருவர் உயிரிழந்தால் அவர்களின் வாரிசுகளுக்கும்  பதவி வழங்கப்படும்.இனி திருமணமான மகன்களுக்கும் பணி வழங்கப்படும் என மத்திய அரசுஅறிவித்துள்ளது.முன்பு திருமணமான மகன்களுக்கு இச்சலுகை மறுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

உலகம்

1.தைவானில்  உலகின் முதல் வளைவான மடிக்கணிணி ( world’s first curved screen laptop ) Predator 21 X ஐ Acer நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
2.ஆஸ்திரேலியாவில் ஓட்டுநர் இல்லா பேருந்து RAC Intellibus ஐ  RAC நிறுவனம் தயாரித்து இயக்கியுள்ளது. இந்த பேருந்து 20 கி.மீ. வேகத்தில் செல்லும்.இதில் 11 நபர்கள் பயணம் செய்யலாம்.

விளையாட்டு

1.இலங்கை-ஆஸ்திரேலியாவுக்கு இடையே நடைபெற்ற முதல் டி-20 கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா அணி புதிய உலக சாதனை படைத்துள்ளது.முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி நிர்ணையிக்கப்பட்ட 20 ஓவர்களில் 3 விக்கெட்களை மட்டும்  இழந்து 263 ரன்களைக் குவித்தது புதிய உலக சாதனையை புரிந்துள்ளது.அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் கிளென் மேக்ஸ்வெல் 65 பந்துகளில் 145 ரன்களை விளாசினார்.பின் ஆடிய இலங்கை அணி  20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 178 ரன்களே மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது.இதற்கு முன்பு கென்யாவுக்கு எதிராக இலங்கை அணி 260 ரன்கள் எடுத்ததே உலக சாதனையாக இருந்தது.இப்பொழுது ஆஸ்திரேலியா அணி அந்த சாதனையை தகர்த்து புதிய சாதனையை நிகழ்த்தியது.
2.இந்திய கிரிக்கெட் அணியின் முடிசூடா மன்னன் சச்சின் தெண்டுல்கர் எஸ்.ஆர்.டி. ஸ்போர்ட்ஸ்(SRT Sports) எனும் விளையாட்டு மேலாண்மை நிறுவனத்தை துவக்கியுள்ளார்.இந்த நிறுவனத்திற்கு தலைமை நிர்வாக அதிகாரியாக  மிரின்மோய் முகர்ஜி என்பவரை நியமித்துள்ளார்.