இந்தியா

1.சரக்கு மற்றும் சேவை வரி மசோதா(ஜி.எஸ்.டி) மக்களவையை தொடர்ந்து மாநிலங்களவையில் நேற்று  நிறைவேற்றப்பட்டது.


வர்த்தகம்

1.இந்திய மென்பொருள் நிறுவனங்களின் சங்கத் தலைவராக (நாஸ்காம்) ராமன் ராய் நியமிக்கப்பட்டுள்ளார்.


உலகம்

1.லான்செட் மருத்துவ இதழ் உலகம் முழுவதும் புகை பிடிப்பது தொடர்பான ஆய்வொன்றை சமீபத்தில் வெளியிட்டுள்ளது.இதில் புகைப்பிடிப்பதால் அதிகம் உயிரிழப்போர் கொண்ட நாடுகள் பட்டியலில் சீனா முதல் இடத்தை பிடித்துள்ளது.இந்தியா இரண்டாவது இடத்தையும்,அமெரிக்கா மூன்றாவது இடத்தையும்,ரஷியா நான்காவது இடத்தையும் பிடித்துள்ளன.மேலும் அதிகம் புகைபிடிக்கும் பெண்கள் உள்ள நாடுகள் பட்டியலில் அமெரிக்கா முதல் இடத்தை பிடித்துள்ளது.சீனா இரண்டாவது இடத்தையும்,இந்தியா மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளன.


விளையாட்டு

1.ஃபிபா அறிவித்துள்ள சமீபத்திய  கால்பந்து தரவரிசை பட்டியலில் இந்திய அணி 31 இடங்கள் முன்னேறி  101-வது இடத்தை பிடித்துள்ளது.


இன்றைய தினம்

1.இன்று உலக சுகாதார தினம் (World Health Day).
மக்கள் அனைவருக்கும் ஆரோக்கியமான சுகாதாரம் வழங்க வேண்டும் என்பது உலக சுகாதார அமைப்பின் முக்கிய குறிக்கோளாகும். உலக சுகாதார அமைப்பானது ஐக்கிய நாடுகள் சபையின் ஓர் சார்பு நிறுவனம். இது 1948ஆம் ஆண்டு ஏப்ரல் 7ஆம் தேதி ஆரம்பிக்கப்பட்டது. ஆகவேதான் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 7 அன்று உலக சுகாதார தினம் கொண்டாடப்படுகிறது.
2.இன்று ருவாண்டா இனப்படுகொலை நினைவு தினம் (Day of Remembrance of the Rwanda Genocide).
ருவாண்டாவில் 1994ஆம் ஆண்டு ஏப்ரல் 7 அன்று இனப்படுகொலை தொடங்கியது. இது 100 நாட்களுக்கு மேல் நடந்தது. இதில் 20 சதவீதமான மக்கள் இறந்தனர். அதாவது 80000 அப்பாவி மக்கள் மிகக் கொடூரமாக கொலை செய்யப்பட்டனர். இனப்படுகொலையில் உயிர் இழந்தவர்களுக்காகவும், இது போன்ற நிகழ்வுகள் மீண்டும் ஏற்படாமல் இருக்க நினைவு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
3.வால்ட் டிஸ்னி மிக்கி மௌஸின் படத்தை வரைந்த தினம் 07 ஏப்ரல் 1928.
4.பிரான்ஸ் மீட்டர் அளவு முறையை அறிமுகப்படுத்திய நாள் 07 ஏப்ரல் 1795.
5.ஆங்கிலேய வேதியியலாளர் ஜோன் வோக்கர் தான் கண்டுபிடித்த தீக்குச்சியை விற்பனைக்கு விட்ட நாள் 07 ஏப்ரல் 1827.
6.மார்ஸ் ஒடிசி விண்கலம் ஏவப்பட்ட நாள் 07 ஏப்ரல் 2001.

 

– தென்னகம்.காம் செய்தி குழு