தமிழகம்

1.தமிழக அரசின் ஊழல் கண்காணிப்பு மற்றும் நிர்வாக சீர்திருத்த ஆணையராக V.K. ஜெயக்கொடி IAS நியமனம் செய்யப்பட்டுள்ளார்.


இந்தியா

1.இந்தியா, சிந்து நதி ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஜீலம் மற்றும் செனாப் நதிகளின் கிளை ஆறுகளான கிஷன்கங்காவில் 330 மெகாவாட் அளவிலும், ராட்டில் 850 மெகாவாட் அளவிலும் நீர்மின் உற்பத்தி நிலையங்கள் கட்டுவதற்கு நிபந்தனைகளின் அடிப்படையில் அனுமதி பெற்றுள்ளது.
2.துணை ஜனாதிபதி தேர்தலில் வெங்கையா நாயுடு வெற்றி பெற்றுள்ளார்.இவர் வரும் 11-ஆம் தேதி பதவி ஏற்க உள்ளார்.
3.நிதி ஆயோக் அமைப்பின் புதிய துணைத் தலைவராக ராஜீவ் குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.


உலகம்

1.ருவாண்டா நாட்டின் அதிபர் தேர்தலில் போட்டியிட்ட பால் ககாமி வெற்றி பெற்று தொடர்ந்து மூன்றாவது முறையாக அதிபர் ஆகியுள்ளார்.இவர் 17 ஆண்டுகளாக அதிபர் பதவி வகித்து வருகிறார்.


இன்றைய தினம்

1.1832 – இலங்கையில் சேமிப்பு வங்கி ஆரம்பிக்கப்பட்டது.

– தென்னகம்.காம் செய்தி குழு