current-affairs

இந்தியா

1.நாட்டில் 893 பேருக்கு 1 மருத்துவர் இருப்பதாக மத்திய சுகாதாரத் துறை இணையமைச்சர் ஃபகன் சிங் குலஸ்தே தெரிவித்துள்ளார்.
2.கல்கத்தாவில் வங்காளப் பிரிவினை எதிர்ப்புப் போராட்டத்தின் போது முதல் இந்திய தேசியக் கொடி உருவாக்கப்பட்டு பார்சி பகான் சதுக்கத்தில் ஏற்றப்பட்ட நாள் 07 ஆகஸ்டு 1906.
3.இன்று  நோபல் பரிசு பெற்ற இந்தியக் கவிஞர்  இரவீந்திரநாத் தாகூர் நினைவு தினம்.இவர் இறந்த தேதி 07 ஆகஸ்டு 1941.இரவீந்தரநாத் தாகூர் (வங்காள மொழி: மே 7, 1861- ஆகஸ்ட் 7, 1941) புகழ் பெற்ற வங்காள மொழிக் கவிஞர் ஆவார். கீதாஞ்சலி என்ற கவிதை தொகுப்பிற்காக இவர் 1913-ல் இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்றார். இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்ற முதல் ஆசிரியர் இவரே ஆவார். இந்தியாவின் தேசியகீதமான ஜன கண மன பாடலை இயற்றியவரும் இவரே. மக்கள் இவரை அன்புடன் குருதேவ் என்று அழைப்பதுண்டு. இவருடைய மற்றொரு பாடல் அமர் சோனார் பங்களா வங்காளதேசத்தின் தேசிய கீதமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
4.பாலில் கலப்படம் செய்தால் ஆயுள் தண்டனை சட்ட திருத்தம் கொண்டு வர மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.தற்போது கலப்படம் செய்பவர்களுக்கு 6 மாதங்கள் வரை சிறை தண்டனை விதிக்கும் வகையில்தான் சட்டம் உள்ளது.
5.டெல்லியில் இயங்கி வரும் திங்க்-டங் ஏடிஆர் என்ற ஆய்வு நிறுவனம் அமைச்சர்களிடம் நடத்திய ஆய்வின் முடிவில் மாநில அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள அமைச்சர்களில் 34 சதவிதம் பேர் மீது கிரிமினல் வழக்குகள் இருப்பதாகவும் 76 சதவீதம் பேர் கோடீஸ்வரர்கள் என தெரிவித்துள்ளது.மொத்தம் உள்ள 620 அமைச்சர்களில் 609 பேரிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில் 462 (76 சதவீதம்) பேர் கோடீஸ்வரர்கள் என்பது தெரியவந்துள்ளது.

உலகம்

1.இன்று உலக நண்பர்கள் தினம்(World Friendship Day).அமெரிக்க காங்கிரஸ் 1935ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமை உருவானது. இதனை தேசிய நட்பு தினமாக அமெரிக்காவில் கொண்டாடப்பட்டது. பிறகு மிகப் பெரிய திருவிழாவாகக் கொண்டாடப்பட்டது. நண்பர்கள் தினம் அமெரிக்காவை ஒட்டிய நாடுகளுக்குப் பரவியது. அதன்பின்னர் உலகம் முழுவதும் பரவியது. தற்போது உலகம் முழுவதும் இத்தினம் கொண்டாடப்படுகிறது.
2.இன்று ஐவரி கோஸ்ட் பிரான்சிடம் இருந்து விடுதலை நாள்.விடுதலை அடைந்த தேதி 07 ஆகஸ்டு 1960.

விளையாட்டு

1.ரியோ ஒலிம்பிக்கில் முதல் தங்க பதக்கத்தை வென்றது அமெரிக்கா.இதில் பெண்களுக்கான 10 மீ்ட்டர் ஏர் ரைபிள் துப்பாக்கி சுடும் போட்டியில் அமெரிக்க வீராங்கனை விர்ஜினியா திராஷர் 208.0 புள்ளிகள் பெற்று தங்க பதக்கம் வென்றார்.