Current-Affair-Logo

தமிழகம்

1.இந்தியாவில் முதன்முறையாக கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் மலைப் பகுதியில் ‘ஸ்கை வாக்’ அமைக்கப்பட உள்ளது.இதற்கான ஏற்பாடுகளை வனத்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தியா

1.என்.எல்.சி. இந்தியா நிறுவனத் தலைவர் சரத்குமார் ஆச்சார்யாவுக்கு ஜார்க்கண்ட் மாநில அரசு மற்றும் வர்த்தக இதழ் ஆகியவை சிறந்த பொதுத் துறை நிறுவன தலைமை அதிகாரிக்கான விருதுகளை வழங்கி கெளரவித்துள்ளன.ராஞ்சியில் நடைபெற்ற ஜார்க்கண்ட் மாநில அரசின் தகவல் தொழில்நுட்பத் துறை, இரண்டாவது தகவல் தொழில்நுட்ப மாநாட்டில் இவ்விருது வழங்கப்பட்டது.இவ்விருதை என்.எல்.சி. வர்த்தகத் துறை செயல் இயக்குநர் ஆர்.மோகன் பெற்றுக்கொண்டார்.

உலகம்

1.ஜெனிவா போக்குவரத்துக்கழகம், ஜெனிவா மின்சார வாரியம் மற்றும் தொழிற்சாலை மற்றும் தொழில்நுட்பக் கழகம் ஆகியவை இணைந்து 15 நொடிகள் சார்ஜ் செய்தால் இரண்டு கிலோமீட்டர் தூரம் பயணிக்கும் பேருந்தை உருவாக்கியுள்ளனர்.பேருந்தின் மேற்கூரையில் சார்ஜ் செய்ய உதவும் கருவி பொருத்தப்பட்டுள்ளது
2.இனி, ஒவ்வொரு ஆண்டின் ஜனவரி மாதம் தமிழ் மரபு மாதமாகக் (Tamil Heritage month) கொண்டாட ஒட்டாவா – கனடாவின் நாடாளுமன்றத்தில் அக்டோபர் 5-ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட மசோதா ஏற்றுக் கொள்ளப்பட்டது.இனி 2017ம் ஆண்டு ஜனவரி முதல் இது நடைமுறைக்கு வருகிறது.
3.இன்று உலக புன்னகை தினம் (World Smile Day).
புன்னகை என்பது மனிதனோடு கூடப்பிறந்த ஒரு உணர்வின் வெளிப்பாடு. ஆரோக்கியமான மனிதனிடமிருந்து வெளிப்படும். இது மனிதனை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க உதவுகிறது. ஹார்வே பால் (Harvey Ball) என்பவர் 1963இல் புன்னகை முகம் என்பதை அறிமுகம் செய்தார். இதனைத் தொடர்ந்து உலகப் புன்னகை தினம் 1999ஆம் ஆண்டில் கொண்டாடப்பட்டது. பின்னர் இது ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் முதல் வெள்ளிக்கிழமை உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது

தினம் ஒரு மாவட்டம் சிறப்பு செய்திகள்

12.இன்று சேலம் மாவட்டம்.

தமிழகத்தின் 5வது பெரிய நகரான சேலம் தமிழகத்தின் வட மத்திய பகுதியில் அமைந்துள்ளது. சைலம் என்ற சொல்லிற்கு மலைகளால் சூழ்ந்த வாழிடம் என்பது பொருள். இந்த சைலம் என்பதே திரிந்து, சேலம் ஆனது. கொங்கு மண்டலத்தின் கிழக்கு எல்லையில் அமைந்துள்ள சேலம் ஒரு வணிக நடுவம் ஆகும். சேலம் மல்கோவா வகை, மாம்பழத்திற்கு பெயர் பெற்ற இடம். இதனால் இதனை “மாங்கனி நகரம்” என்றும் அழைப்பார்கள். அண்ணாமலையார் இந்த பூலேகத்தில் முதலில் பொற்பதம் வைத்த இடம் சேலம் வாழைப்பாடி ஊர்க்கு அருகே உள்ள கோதுமை மலை தான் அவர் ஒரு பொற்பதத்தை வைத்தார். அப்பொழுது மலை சரிவு ஏற்பட்ட மற்றொரு பொற்பத்தை திருவண்ணாமலையில் வைத்தார் பிறகு இரண்டு பொற்பதங்கலையும் திருவண்ணாமலையில் வைத்து ஜோதியாக அருள் வழங்கினார். அந்த கோதுமை மலையின் உச்சியில் சிவன் பொற்பதம் பட்டதால் சமமான இருக்கிறது.
சேலம் மாவட்டம் நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்கள் சேலத்திலிருந்து பிரிக்கப்படுவதற்கு முன் தமிழகத்தின் மிகப்பெரிய மாவட்டமாக சேலம் மாவட்டமே அறியப்பட்டு வந்தது. தமிழ்நாட்டின் பல பகுதிகளுக்கு நீராதாரமாக விளங்கிவரும் மேட்டூர் அணை, புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான ஏற்காடு ஆகியவை சேலம் மாவட்டத்தில்தான் அமைந்திருக்கின்றன.சேலம் மாவட்டம் பொதுவாக மலைகள் சூழ்ந்த மாவட்டம் ஆகும்.மேலும் இந்தியாவிலேயே மிகவும் நீளமான – பெரிய இரயில்வே பிளாட்பாரம் சேலம் சந்திப்பு நிலையப் பிளாட்பாரமே ஆகும்.சேலம் என்ற பெயரில் அமெரிக்காவிலும், இங்கிலாந்திலும்கூட நகரங்கள் உண்டு.
கடந்த சில ஆண்டுகளாக சேலம் மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் பெருமளவில் கல்வி நிறுவனங்கள் வளர்ந்து உள்ளன. பெரியார் பல்கலைக்கழகம் இங்கு அமைந்துள்ளது. சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட கல்லூரிகள் இப் பல்கலைகழகத்தின் கட்டுப்பாட்டுக்குள் வருகின்றன. 2 மருத்துவ கல்லூரிகள் இங்கு உள்ளன. அரசு பொறியியல் கல்லூரி இங்குள்ளது. அனைத்து துறை சார்ந்த கல்லூரிகளும் இந்த பகுதியில் பெருமளவு அமைந்துள்ளன. தரமான பள்ளிகளும் பெருமளவில் உள்ளன.
இம்மாவட்டத்தில் பெரும்பகுதி செம்மண், மற்றும் கரிசல்மண் வகையைச் சார்ந்தது. இங்கு காவிரியும், வெள்ளாறும், வசிட்ட நதியும் ஓடுகிறது. இம்மாவட்டம் குறிஞ்சித் திணையைச் சார்ந்தது. கல்வராயன், சேர்வராயன், கஞ்சமலை, தீர்த்தலை, நைனாமலை, கபிலமலை முதலியவை முக்கியமானவை.
சேலத்திலிருந்து 52 கி.மீ. தொலைவில் மேட்டூர் அணை உள்ளது. இவ்வணையைக் கட்டியவர் ஜார்ஜ் என்னும் ஆங்கிலேயர். மேட்டூர் அணை இந்தியாவின் மிகப்பெரிய அணைகளுள் ஒன்றாகும். இரண்டு மலைகளுக்கு இடையே காவிரியாற்றை தடுத்து குறுக்கே கட்டப்பட்ட அணையே மேட்டூர் அணையாகும். இந்த அணையின் மூலம் தஞ்சை, திருச்சி, சேலம், நாகை, திருவாரூர் மாவட்டங்களில் 2,71,000 ஏக்கர் நிலம் பாசன வசதி பெருகிறது. மேட்டூர் அணையிலிருந்து ஓடிவரும் நீரைக் கொண்டு மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கு சுரங்க மின் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. அணையை ஒட்டி பூங்கா அமைந்துள்ளது. இந்நகரையொட்டி தொழிற்பேட்டைகள் அமைந்துள்ளன. இரசாயனப் பொருள் உற்பத்தி சாலையும், அலுமினியத் தொழிற்சாலையும் உள்ளன.