தமிழகம்

1.மாநில குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவராக ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி எம்.பி.நிர்மலா நியமிக்கப்பட்டுள்ளார்.இதன் ஆணைய உறுப்பினர்களாக ஷீலா ஜெயந்தி (சென்னை),சி.திலகவதி (தஞ்சாவூர்), மீரா ஷங்கர் (தூத்துக்குடி), ஏ.ராமநாதன் (சிவகங்கை), இ.ராமலிங்கம் (சென்னை), பி.மோகன் (திருச்சி) ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.இந்த அறிவிப்பை  தமிழக அரசு வெளியிட்டுள்ளது.


இந்தியா

1.காஷ்மீர் மாநிலம் ரியாசி மாவட்டத்தில் செனாப் ஆறு உள்ளது. இந்த ஆற்றின் மீது 1,315 மீ நீளத்தில் 359 மீட்டர் உயரத்தில் பிரம்மாண்ட ரயில் பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.இந்த பாலம் மூலம், பாரமுல்லா – ஶ்ரீநகர் ஆகியவை ஜம்முவுடன் இணைக்கப்படும். இந்த பாலம் கட்டி முடிக்கப்பட்ட பின் உலகிலேயே மிகவும் உயரமான பாலம் என்ற பெருமையை பெறும்.
2.கல்லூரி மாணவர்களிடையே தேசப்பற்றை அதிகரிக்க, Vidya Veerta Abhiyan என்ற பிரச்சார இயக்கத்தை மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் தொடங்கி வைத்துள்ளார்.இதன்படி கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் 15 x 20 அளவுள்ள சுவர் எழுப்பி ( Wall Of Valour – தீரமிகு சுவர் ) அதில் பரம்வீர் சக்ரா விருது பெற்ற 21 ராணுவ வீரர்களின் புகைப்படம் மற்றும் செய்தியை இடம்பெற செய்தல் வேண்டும்.
3.கொல்கத்தாவில் அமைந்துள்ள கொரிய குடியரசின் ( தென் கொரியா ) துணை தூதரகத்தின் கவுரவ அலுவலராக பணியாற்றிய , Nicco குழுமத்தின் தலைவர் மற்றும் முன்னாள் CII தலைவரான ராஜிவ் கவுல் க்கு , தென் கொரியா அரசு Order of Diplomatic Service Merit Sungnye Medal of the Republic of Korea என்ற விருதை வழங்கியுள்ளது.
4.மும்பை- கோவா இடையே உலகத்தர வசதிகள் கொண்ட தேஜாஸ் எக்ஸ்பிரஸ் ரயில் ஜுன் மாதம் முதல் இயங்கப்பட உள்ளது.இந்த புதிய ரயிலில் வை-பை வசதி, பிரபல சமையல்காரர்களை கொண்ட சமையல்அறை, ஒவ்வொரு இருக்கைக்கும் டி.வி. வசதி என 22 புதிய அம்சங்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.


விளையாட்டு

1.ஜூன் மாதம் இங்கிலாந்தில் மினி உலகக் கோப்பை என்றழைக்கப்படும் சாம்பியன்ஸ் டிராஃபி போட்டி மற்றும் மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெறுவதை முன்னிட்டு , சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ICC என்ற செயலியையும், லீடிங் எட்ஜ் என்ற இணையதள வசதியையும் அறிமுகப்படுத்தியுள்ளது.


இன்றைய தினம்

1.இந்தியாவின் முதல் தபால் தலை வெளியிடப்பட்ட நாள் 06 மே 1854.
2.ஈபிள் டவர் பாரிசில் பொதுமக்களுக்காக அதிகாரபூர்வமாகத் திறந்துவிடப்பட்ட நாள் 06 மே 1889.
3.ஜாகிர் உசேன் இந்தியாவின் முதல் முஸ்லிம் குடியரசுத் தலைவரானா நாள் 06 மே 1967.

 

– தென்னகம்.காம் செய்தி குழு