தமிழகம்

1.பெட்ரோலிய பொருட்கள் மீதான வாட் வரி விகிதத்தை தமிழக அரசு அதிகரித்துள்ளது.இதனால் தமிழகத்தில் மட்டும் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3.78-ம் டீசல் விலை லிட்டருக்கு ரூ.1.70-ம்  உயர்ந்துள்ளது.அதாவது முன்பு பெட்ரோல் மீதான வாட் வரி 27%-ஆக இருந்ததை தற்போது 34%-ஆக உயர்த்தப்பட்டுள்ளது.அதேபோல் டீசல் மீதான வாட் வரி 21.4% ஆக இருந்ததை தற்போது 25% -ஆக உயர்த்தப்பட்டுள்ளது.கடந்த மார்ச் 04-ஆம் தேதி முதல் இந்த விலையேற்றம் அமலுக்கு வந்துள்ளது.
2.தென்னிந்தியாவில் முதல்முறையாக கான்கிரீட் தடுப்பணைக்கு மாற்றாக ரப்பர் தடுப்பணை உதகையில் அமைக்கப்பட்டுள்ளது.
3.சென்னை துறைமுகம் ஒரே நாளில் 33 ஆயிரத்து 840 டன் அளவுள்ள சரக்குகளை கையாண்டு புதிய சாதனை படைத்துள்ளது.இந்த சாதனை வெளிநாட்டில் இருந்து எம்.வி. குயிங் ஹுவா ஷான் என்ற கப்பல் மூலம் சுண்ணாம்புக் கல் வந்ததன் மூலம் கிடைத்துள்ளது.இந்த தகவலை சென்னை துறைமுகம் வெளியிட்டுள்ளது.


இந்தியா

1.டெல்லியில் முன்னாள் எம்.பி. சகாபுதீன் (82) கடந்த மார்ச் 04-ஆம் தேதி காலமானார்.இவர் கடந்த 1979 முதல் 1996 வரை பாராளுமன்றத்தில் உறுப்பினராக இருந்தது குறிப்பிடத்தக்கது.
2.பள்ளிகளில் மதிய உணவு சாப்பிடும் மாணவர்களுக்கு ஆதார் எண்களை பதிவு செய்வது கட்டாயம் என்று மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
3.ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் புதிய தலைமை தகவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ள குர்ஷீத் ஏ கனாய் கடந்த மார்ச் 04-ஆம் தேதி பொறுப்பேற்றுக் கொண்டார்.அவருக்கு ஜம்மு காஷ்மீர் கவர்னர் என்.என்.வோஹ்ரா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
4.சிம்கார்டு இல்லாமல், பிராட் பேண்ட் உதவியுடன் செல்போனில் பேசும் “எல்எஃப்எம்டி”(Limited Fixed Mobile Telephony) என்ற புதிய வசதியை பிஎஸ்என்எல் அறிமுகம் செய்துள்ளது.இதற்காக “ஜொய்ப்பர்” என்ற செயலியை (Zoiper App) பதிவிறக்கம் செய்துகொண்டால் போதும் இந்த வசதியை  பயன்படுத்தி கொள்ளலாம்.


உலகம்

1.ஏப்ரல் மாதம் 3-ந்தேதி முதல் 6 மாதத்துக்கு தற்காலிகமாக “எச்.1 பி” விசா இனி வழங்கப்படாது என அமெரிக்கா அறிவித்துள்ளது.


விளையாட்டு

1.துபாய் டென்னிஸ் போட்டியில் ஆண்கள் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்தின் ஆன்டி முர்ரே 6-3, 6-2 என்ற நேர் செட்டில் பெர்னாண்டோ வெர்டஸ்கோவை (ஸ்பெயின்) வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.23 ஆண்டு கால துபாய் டென்னிஸ் வரலாற்றில் இங்கிலாந்து வீரர் ஒருவர் இந்த பட்டத்தை வெல்வது இதுவே முதல் முறையாகும்.ஆண்கள் இரட்டையர் பிரிவில் ஜூலியன் ரோஜர் (நெதர்லாந்து) ஹோரியா டெகாவ் (ருமேனியா) இணை,ரோகன் போபண்ணா (இந்தியா) மார்சின் மேட் கோவ்ஸ்னி (போலந்து) இணையை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.


இன்றைய தினம்

1.மதுரை மாவட்டம் உருவாக்கப்பட்ட நாள் 06 மார்ச் 1790.
2.ருமேனியாவில் கம்யூனிச அரசு பதவிக்கு வந்த நாள் 06 மார்ச் 1945.
3.காசியஸ் கிளே தனது பெயரை அதிகார பூர்வமாக முகமது அலி என மாற்றிக் கொண்ட நாள் 06 மார்ச் 1964.
4.திராவிட முன்னேற்றக் கழகம் தமிழ்நாட்டில் முதன்முறையாக ஆட்சியைக் கைப்பற்றிய நாள் 06 மார்ச் 1967.

 

– தென்னகம்.காம் செய்தி குழு