தமிழகம்

1.சென்னையில் நேற்று நடைபெற்ற அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில், கட்சியின் சட்டமன்றக் கட்சி தலைவராக சசிகலா ஒரு மனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.


இந்தியா

1.முஸ்லிம் சமுதாயத்தினர் ஹஜ் யாத்திரை பயணம் மேற்கொள்வதற்கு வழங்கப்படும் மானியம் குறித்து ஆய்வு செய்வதற்காக மத்திய அரசு குழு ஒன்றை அமைத்துள்ளது.இந்த குழுவின் அமைப்பாளராக ஜெட்டா துணை தூதரகத்தின் முன்னாள் இந்தியத் தூதர் அஃப்ஸல் அமானுல்லா நியமிக்கப்பட்டுள்ளார்.


உலகம்

1.2020-ஆம் ஆண்டு டோக்கியோவில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டியின் தூதராக அனிமேசன் கதாபாத்திரம் Son Goku தேர்வு செய்யப்பட்டுள்ளது.
2.வங்காளதேச அரசியல் சட்ட வடிவமைப்பில் முக்கிய பங்காற்றியவரும், ஆளும் அவாமி லீக் கட்சியின் முக்கிய தலைவருமான சுரஞ்சித் சென்குப்தா(72) நேற்று காலமானார்.
3.ஹைதி நாட்டின் நாடாளுமன்றத் தேர்தலில் ஜோவ்னல் மோய்ஸ் தலைமையிலான டெட் கேல் கட்சி பெரும்பான்மையைப் பெற்று வெற்றி பெற்றுள்ளது.புதிய அதிபராக டெட் கேல் கட்சியின் தலைவர் ஜோவ்னல் மோய்ஸ் நாளை பதவியேற்க உள்ளார்.


விளையாட்டு

1.ஹரியாணா மாநிலம் மனேசரில் நடைபெற்ற தேசிய டேபிள் டென்னிஸ் போட்டியில் ஆடவர் ஒற்றையர் இறுதிச் சுற்றில் தமிழக வீரரான சரத் கமல் 11-8, 6-11, 11-9, 3-11, 11-8, 11-5 என்ற செட் கணக்கில் செளம்யஜித் கோஷை தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.மகளிர் ஒற்றையர் இறுதிச் சுற்றில் மதுரிகா 11-5, 11-9, 11-5, 12-10 என்ற நேர் செட்களில் 6 முறை தேசிய சாம்பியன் பட்டம் வென்றவரான பௌலமி கடக்கை தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.ஆடவர் இரட்டையர் இறுதிச்சுற்றில் செளம்யஜித் கோஷ்-ஜுபின் குமார் ஜோடி 11-3, 7-11, 11-6, 8-11, 11-5 என்ற செட் கணக்கில் சுஷ்மித் ஸ்ரீராம்-அனிருபன் கோஷ் ஜோடியை தோற்கடித்து சாம்பியன் பட்டம் வென்றனர்.மகளிர் இரட்டையர் பிரிவில் அனின்திதா சக்ரவர்த்தி-சுத்ரிதா முகர்ஜி ஜோடி 11-8, 11-8, 4-11, 11-3 என்ற நேர் செட் கணக்கில் போலோமி கடக்-மெளதா தாஸ் ஜோடியை தோற்கடித்து சாம்பியன் பட்டம் வென்றனர்.கலப்பு இரட்டையர் பிரிவில் அர்ஜுன் கோஷ்-சுத்ரிதா முகர்ஜி ஜோடி 11-9, 11-5, 11-9 என்ற நேர் செட்களில் சனில் ஷெட்டி-பூஜா சஹஸ்ராபுதே ஜோடியை  தோற்கடித்து சாம்பியன் பட்டம் வென்றனர்.


இன்றைய தினம்

1.இன்று பெண் இனப்பெருக்கத்தை அழிப்பதை ஒழிக்கும் சர்வதேச தினம் (International Day of Zero Tolerance to Female Genital Mutilation).
பெண் பிறப்புறுப்பு சிதைப்புடன் சுமார் 125 மில்லியன் பெண் குழந்தைகள் மற்றும் பெண்கள் ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு போன்ற 29 நாடுகளில் வாழ்ந்துகொண்டு இருக்கின்றனர். இது பெண்களுக்கு எதிரான தீவிர பாகுபாடாகும். இது சித்திரவதை மற்றும் கொடூரமான, மனிதாபிமானமற்ற இழிவான சிகிச்சையாகும். இதனை ஒழித்திட, விழிப்புணர்வு ஏற்படுத்திட 2012 இல் ஐ.நா. சபை இத்தினத்தை அறிவித்தது.
2.ஸ்டாம்ஃபோர்ட் ராஃபில்ஸ் என்பவரால் சிங்கப்பூர் அமைக்கப்பட்ட நாள் 05 பிப்ரவரி 1819.
3.சிலோன் பேட்ரியட் (The Ceylon Patriot) இதழ் யாழ்ப்பாணத்தில் வெளியிடப்பட்ட நாள் 05 பிப்ரவரி 1863.
4.கண்டம் விட்டுக் கண்டம் பாயும் முதலாவது டைட்டான் ஏவுகணை புளோரிடாவில் வெற்றிகரமாகப் பரிசோதிக்கப்பட்ட நாள் 05 பிப்ரவரி 1959.
5.டார்ஜா ஹலோனென் பின்லாந்தின் முதல் பெண் அதிபரான நாள் 05 பிப்ரவரி 2000.

– தென்னகம்.காம் செய்தி குழு