Current-Affairs-Updates

இந்தியா

1.மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லுாரிகளில் நவம்பர் 11ம் தேதி தேசிய கல்வி நாள் கொண்டாட வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளது.
2.நிலுவையில் உள்ள வழக்குகளை விரைவில் விசாரிப்பதற்கு வசதியாக உயர் நீதிமன்றங்களில் காலியாக உள்ள நீதிபதி பணியிடங்களில் ஓய்வு பெற்ற நீதிபதிகளை நியமிப்பது என்று  நீதித் துறையும்,மத்திய அரசும் ஒப்புக் கொண்டுள்ளன.
3.நாடு முழுவதும் பதிவைப் புதுப்பிக்காத 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு சாரா தன்னார்வ அமைப்புகளின் (என்.ஜி.ஓ) அங்கீகாரத்தை மத்திய அரசு அதிரடியாக ரத்து செய்துள்ளது.
4.டாடா சன்ஸ் மனிதவள மேம்பாட்டுப் பிரிவு தலைவராக எஸ். பத்மநாபன் நியமிக்கப்பட்டுள்ளார்.

உலகம்

1.மைக்ரோசாஃப்ட் நிறுவனம் விண்டோஸ் 7 மற்றும் 8 இயங்குதளத்தின் விற்பனையை முற்றிலுமாக நிறுத்தியுள்ளது. மேலும் விண்டோஸ் 10 இயங்குதளத்தின் விற்பனையை அதிகரிக்கவும் திட்டமிட்டுள்ளது.
2.பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்வற்கான பாரீஸ் ஒப்பந்தம், சர்வதேச சட்டமாக அமலுக்கு வந்ததுள்ளது.
3.ஏவுகணைத் தாக்குதலிலிருந்து பாதுகாத்துக் கொள்ளும் விதமாக புதிய தடுப்புத் திட்டத்தை தென் கொரியாவில் அடுத்த எட்டு முதல் பத்து மாதங்களில் அமைக்க உள்ளதாக அமெரிக்க மூத்த தளபதி வின்சென்ட் புரூக்ஸ் சியோலில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் பேசுகையில் இதனைத் தெரிவித்துள்ளார்.
4.இன்று சர்வதேச போர் மற்றும் ஆயுத மோதல்களின் சுற்றுச்சூழல் சுரண்டல் தடுக்கும் தினம் (International Day for Preventing the Exploitation of the Envirenment in war and Armed Confliet).
போர் மற்றும் ஆயுத மோதல்களால் இயற்கை பலவிதங்களில் சேதமடைகிறது. பயிர்கள், தண்ணீர் விநியோகம், தண்ணீர் விசமாதல், காடுகள் எரிதல், காடுகள் அழிக்கப்படுதல் போன்ற மோசமான பாதிப்புகள் ஏற்படுகின்றன. அது தவிர பல தொழில்நுட்பங்களும் அழிக்கப்படுகின்றன. சுற்றுச்சூழல் பாதிக்கக்கூடாது என்பதற்காக ஐ.நா. சபை 2001ஆம் ஆண்டில் இத்தினத்தை அறிவித்தது.

விளையாட்டு

1.ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் பிலிப் ஹியூஸ் பவுன்சர் பந்து தாக்கி மரணமடைந்ததற்கு பந்து வீச்சாளர் மீதோ அல்லது மற்றவர்கள் மீதோ பழிசுமத்த முடியாது என அவருடைய மரணம் குறித்து விசாரணை நடத்திய நியூ செளத் வேல்ஸ் நீதிபதி மைக்கேல் பர்ன்ஸ் தெரிவித்துள்ளார்.
2.தூத்துக்குடி மாவட்டம், வல்லநாட்டில் இரண்டு நாள்கள் நடைபெற்ற காவல் துறையினருக்கான துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் தமிழக கமாண்டோ அணி சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றது.
3.அகில இந்திய டென்னிஸ் சங்க (ஏஐடிஏ) தலைவர் அனில் கன்னா தனது பதவியை ராஜிநாமா செய்வதாக  தெரிவித்துள்ளார்.
4.சிங்கப்பூரில் நடைபெற்ற ஆசிய மகளிர் சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கிப் போட்டியில் இந்திய மகளிர் அணி 2-1 என்ற கோல் கணக்கில் சீனாவைத் தோற்கடித்து சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.