current_affairs

தமிழகம்

1.தமிழ்நாட்டின் முதலமைச்சர் நேற்று இரவு 11.30 மணிக்கு காலமானார்.இவர் 1948-ல் பிறந்து 2016-ல் மறைந்துள்ளார்.இவர் மறைவுக்கு மத்திய அரசு ஒரு நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என அறிவித்துள்ளது.தமிழகத்தில் 7 நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என மாநில அரசு அறிவித்துள்ளது. தமிழக முதல்வராக ஆறு முறை பதவி வகித்தவர் இவர்.இந்தியாவின் நீண்டகாலம் பதவி வகித்த பெண் முதல்வர்களில் 2வது நபர் ஆவார்.தமிழகத்தின் முதல் பெண் எதிர்க்கட்சி தலைவர் என்ற பெருமையும் இவர் பெற்றுள்ளார்.காமராஜர் ,எம்.ஜி.ஆர்., க்குப்பின் தொடர்ந்து இரண்டாவது முறையாக வெற்றி பெற்றவர் என்ற சாதனையையம் இவர் படைத்துள்ளார்.பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக ராஜாஜி அரங்கில்  ஜெயலலிதாவின் உடல் வைக்கப்பட்டுள்ளது.
2.சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில் தமிழகத்தின் புதிய முதல்வராக 3-ஆவது முறையாக ஓ.பன்னீர்செல்வம் இன்று அதிகாலையில் பதவியேற்றுக்கொண்டார்.
3.சென்னை மெரினா கடற்கரையில் உள்ள எம்ஜிஆர் நினைவிடத்தில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உடல் இன்று மாலை 6.07 மணிக்கு 60 குண்டுகள் முழங்க ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இந்தியா

1.விரைவில் புதிய 20 மற்றும் 50 ரூபாய் நோட்டுகள் வெளியிடப்படும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.ஏற்கனவே புழக்கத்தில் உள்ள  பழைய நோட்டுக்களுக்கு தடை விதிக்கப்படாது என்றும் அறிவித்துள்ளது.
2.அமெரிக்காவின் “டைம்’ பத்திரிகை நடத்திய வாக்கெடுப்பில் 2016-ஆம் ஆண்டின் சிறந்த மனிதராக பிரதமர் நரேந்திர மோடி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
3.கூகிள் அறிமுகம் செய்துள்ள உடனடி தகவல் பரிமாற்ற செயலியான ‘அல்லோ’ நேற்று முதல் ஹிந்தி மொழியிலும் தனது சேவையை அறிமுகப்படுத்துகிறது.
4.ஜெயலலிதா மறைவையடுத்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இன்று இரங்கல் தெரிவிக்கப்பட்டது.பின்னர் அவை நடவடிக்கைகள் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

உலகம்

1.ஐ.நா. சபை சார்பில் ‘சாம்பியன் ஆப் எர்த்’ சுற்றுச்சூழல் விருது மும்பை வெர்ஸோவா கடற்கரையை, வெர்ஸோவா தன்னார்வ தொண்டர்கள் (விஆர்வி) என்ற அமைப்பின்மூலம் சுத்தம் செய்த வழக்கறிஞர் அப்ரோஸ் ஷாவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
2.ஆப்பிரிக்க நாடான காம்பியாவில் நடந்த அதிபர் தேர்தலில் தொடர்ந்து 22 ஆண்டுகள் ஆட்சி செய்த யாக்யா ஜமேக்(Yahya Jammeh)(51), தோல்வியடைந்துள்ளார்.
3.நியூஸிலாந்து பிரதமர் ஜான் கீ (55), தனது பதவியை ராஜினாமா செய்வதாக நேற்று அறிவித்துள்ளார்.
4.தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்கு இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் ரிச்சர்ட் வர்மா இரங்கல் தெரிவித்துள்ளார்.

விளையாட்டு

1.தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் நடைபெற்ற ஆசிய கோப்பை மகளிர் டி20 கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்திய அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.இந்த வெற்றியின் மூலம் தொடர்ந்து ஆசிய கோப்பை போட்டியில் 6-ஆவது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ளது இந்திய மகளிர் அணி.இதுவரை ஆசிய கோப்பை போட்டி 6 முறை மட்டுமே நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.இந்தியாவைத் தவிர வேறு எந்த அணியும் ஆசிய கோப்பை போட்டியில்  சாம்பியன் பட்டத்தை வென்றதில்லை.

முக்கிய தினங்கள்/வாரங்கள்

1.ஐக்கிய அமெரிக்காவில் அடிமை முறை தடை செய்யப்பட்ட நாள் 06 டிசம்பர் 1865.
2.வாஷிங்டன் போஸ்ட் செய்திப்பத்திரிகை முதற்தடவையாக வெளியிடப்பட்ட நாள் 06 டிசம்பர் 1877.
3.வாடகை வாகனம் உலகில் முதல்முறையாக லண்டனில் சேவைக்கு வந்த நாள் 06 டிசம்பர் 1897.
4.பின்லாந்து ரஷ்யாவிடம் இருந்து விடுதலையை அறிவித்த நாள் 06 டிசம்பர் 1917.
5.இன்று டாக்டர் அம்பேத்கர் இறந்த தினம்.இவர் இறந்த தேதி 06 டிசம்பர் 1956.