தமிழகம்

1.தமிழகத்தில் பள்ளிகளில் தற்போதுள்ள கல்விமுறையை மேம்படுத்தி புதிய பாடத்திட்டம் மற்றும் பாடப் புத்தகங்களைப் புதிதாக உருவாக்கவும் 10 பேர் கொண்ட குழுவை அரசு நியமித்துள்ளது.இந்தக் குழுவுக்கு ஐஐடி கான்பூர் முன்னாள் தலைவரும் அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தருமான எம்.ஆனந்த கிருஷ்ணன் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.


இந்தியா

1.புதுச்சேரியில் நியமன எம்.எல்.ஏ.க்களாக, மாநில பாரதிய ஜனதா தலைவர் சாமிநாதன், பொருளாளர் சங்கர், தனியார் பள்ளி தாளாளர் செல்வகணபதி ஆகிய 3 பேரை நியமித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.


உலகம்

1.தென்அமெரிக்காவின் பிரெஞ்சு கயானாவில் உள்ள ஐரோப்பிய விண்வெளி தளத்தில் இருந்து, ஜூன் 29 அன்று ‘ஏரியான் 5 விஏ 238’ ராக்கெட் மூலம் ஜிசாட் 17 செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது.ஜிசாட் 17 செயற்கைக்கோள் 3,477 கிலோ எடை கொண்டதாகும். இதன் ஆயுட் காலம் 15 ஆண்டுகள் ஆகும்.
2.பசி மற்றும் ஊட்டச்சத்து இன்மைக்கு எதிராகப் போராடி வரும் அங்கித் கவத்ரா என்னும் இந்திய இளைஞருக்கு இங்கிலாந்து ராணி இளம் தலைவர்கள் விருது வழங்கிக் கவுரவித்துள்ளார்.இந்தியாவில் பசி மற்றும் உணவை வீணாக்குதலை ஒழிக்க அங்கித், ‘ஃபீடிங் இந்தியா’ என்னும் அமைப்பைத் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.இந்த சேவையைப் பாராட்டி அங்கித்துக்கு இங்கிலாந்து ராணி உயரிய விருதை வழங்கியுள்ளார்.


விளையாட்டு

1.கான்பெடரேசன் கோப்பை கால்பந்து தொடரின் இறுதி போட்டியில் சிலியை வீழ்த்தி ஜெர்மனி முதல்முறையாக கோப்பையை வென்றுள்ளது.


இன்றைய தினம்

1.இன்று உலக ஜூனோசிஸ் தினம் (World Zoonoses Day).
ஜூனோசிஸ் என்பது விலங்குகளுக்கு ஏற்படும் வியாதி. இது விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்குப் பரவுகிறது. காட்டு விலங்குகள், வீட்டில் வளர்க்கும் பூனை, நாய், எலி, பறவைகள் மூலம் மனிதர்களுக்குப் பரவுகின்றன. சில ஆட்கொல்லி நோய்களும் விலங்குகள் மூலம் பரவுகின்றன. விலங்குகள் மூலம் பரவும் நோய்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த ஜூலை 6 அன்று ஜூனோசிஸ் தினம் கொண்டாடப்படுகிறது.
2.1785 – டாலர் ஐக்கிய அமெரிக்காவின் நாணய அலகாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது.
3.1892 – தாதாபாய் நௌரோஜி பிரித்தானிய நாடாளுமன்றத்தின் முதலாவது இந்தியப் பிரதிநிதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
4.1935 – சிங்கப்பூரின் தமிழ் நாளிதழ் தமிழ் முரசு ஆரம்பிக்கப்பட்டது.
5.1947 – சோவியத் ஒன்றியம் ஏகே-47 துப்பாக்கிகளை தயாரிக்க ஆரம்பித்தது.
6.1956 – சிங்களம் இலங்கையின் அதிகாரபூர்வ மொழியானது.

 

– தென்னகம்.காம் செய்தி குழு