current-affairs

தமிழகம்

1.3000 ஆண்டுகள் பழமையான சங்ககால பாறை ஓவியங்கள் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.

இந்தியா

1.டைம்ஸ் வெளியிட்டுள்ள ஆசிய அளவிலான தரமான உயர்கல்வி நிறுவனங்களின் பட்டியலில் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம் முதல் இடத்திலும், சிங்கப்பூர் நான்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் 2-ஆம் இடத்திலும், சீனாவின் பெகிங் பல்கலைக்கழகம் மூன்றாவது இடத்திலும் உள்ளன.இதில், ஆசிய அளவிலான பட்டியலில் முதல் 100 இடங்களுக்குள் 8 இந்திய கல்வி நிறுவனங்கள் இடம்பிடித்துள்ளன.சென்னை ஐஐடி 62-ஆவது இடம்பெற்றுள்ளன.
2.இந்தியன் வங்கியின் புதிய நிர்வாக இயக்குனர் மற்றும் முதன்மை செயல் அலுவலராக மகேஷ்குமார் ஜெயின் நியமிக்கப்பட்டுள்ளார்.இவர், கடந்த 2ம் தேதி பொறுப்பேற்றுக் கொண்டார்.
3.இந்தியன் வங்கி ஏ.டி.எம். கார்டைப் பயன்படுத்தி, வழக்கத்தை விட கூடுதலான தொகையை எடுப்பதற்காக ’ரூபே பிளாட்டினம் டெபிட்” கார்டை அறிமுகப்படுத்தியுள்ளது.அதேபோல், ஏ.டிஎம். கார்டுகளில் பின்னணிக் காட்சிகள் அமைக்கவும்,  ஏ.டி.எம். கார்டில் பின் எண்ணை செல்போன் மூலம் மாற்றிக் கொள்ளும் வசதியும்,  நெட் பேக்கிங் முறையில் காசோலை விவரங்களை அறிந்து கொள்ளவும், வங்கி ஊழியர்களின் பயன்பாட்டுக்காக மொபைல் ஆப் வசதியும் அறிமுகப்படுத்தி உள்ளது.
4.பிரிக்ஸ் அமைப்பு சார்பில் எரிபொருள் சேமிப்பு தொடர்பான, இருநாள் சர்வதேச மாநாடு விசாகப்பட்டினத்தில்  நடைபெற்றது.இதில் பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென்ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

உலகம்

1.இன்று  பெரு நாட்டில் ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டது.
2.சிங்கப்பூரில் தமிழ் நாளிதழ் தமிழ் முரசு ஆரம்பிக்கப்பட்ட நாள் 06 ஜூலை 1935.