இந்தியா

1.இதுவரை செலுத்திய செயற்கைகோள்களிலேயே அதிக எடை கொண்டதான ஜி.சாட் 19 செயற்கைகோளை, GSLV மார்க் III ராக்கெட் மூலம் வெற்றிகரமாக நேற்று விண்ணில் செலுத்தி சாதனை புரிந்துள்ளது இஸ்ரோ.ஜிசாட் 19 செயற்கை கோளானது இந்தியாவின் தகவல் தொடர்புக்கு பயன்படும் ஜியோஸ்டேஷனரி கம்யூனிகேஷன் சாட்டிலைட் ஆகும்.இதன் எடை 3136 கிலோகிராம். இதன் ஆயுட்காலம் 10 ஆண்டுகள் ஆகும்.GSLV MK III ராக்கெட்டின் மொத்த உயரம் 43.43 மீட்டர். மொத்த எடை 640 டன். சுமார் 200 ஆசிய யானைகளின் எடைக்கு சமமானது இது. கிரையோஜெனிக் தொழில்நுட்பத்தில் இயங்கக்கூடியது.
2.புதுடெல்லியில் செப்டம்பரில் India Mobile Congress 2017 (IMC 2017) நடைபெறவுள்ளது.
3.சாட்டிலைட் உதவியுடன் நாட்டில் பயிரிடப்பட்டுள்ள பசுந்தீவன நிலங்களை அறிய அமுல் நிறுவனம் (குஜராத் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் நிறுவனம்) இஸ்ரோ நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது.
4.IIT கரக்பூர் விஞ்ஞானிகள் , Soil To Soil என்ற உற்பத்தி தொழில்நுட்பத்தின் அடிப்படையில் விலை மலிவான, சுற்றுச்சூழல் மாசு ஏற்படுத்தாத உயிரி எரிபொருளை உருவாக்கியுள்ளனர்.
5.திறந்தவெளியில் மலம் கழிப்பதை தவிர்த்து, கழிவறையை பயன்படுத்த வலியுறுத்தும் வகையில், மத்திய குடிநீர் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சகத்தின் சார்பில் Darwaza Band என்ற பிரச்சார இயக்கம் துவங்கப்பட்டுள்ளது.இதனை பிரபலப்படுத்த அமிதாப்பச்சன் மற்றும் அனுஷ்கா சர்மா ஆகியோர் முன்வந்துள்ளனர்.
6.மும்பையில் இயங்கும் தாதாசாகேப் பால்கே அகாடமி என்ற அமைப்பின் சார்பில் (Internationally Acclaimed Actress) சர்வதேச அளவில் புகழ்பெற்ற நடிகை என்ற விருது, பிரபல ஹிந்தி நடிகை பிரியங்கா சோப்ராவுக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.மத்திய அரசு வழங்கும் தாதாசாகேப் பால்கே விருது அல்ல இது. மத்திய அரசு 2016ம் ஆண்டுக்கான தாதாசாகேப் பால்கே விருதை K.விஸ்வநாத் அவர்களுக்கு வழங்கியுள்ளது.
7.புதுடெல்லியில் அமைந்துள்ள ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழக வேந்தராக, மணிப்பூர் கவர்னராக உள்ள நஜ்மா ஹெப்துல்லா நியமிக்கப்பட்டுள்ளார்.இவருக்குமுன் ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழக வேந்தராக லெப்டினல் ஜெனரல் (ஓய்வு) எம்ஏ சாகி என்பவர் பதவி வகித்தார்.


உலகம்

1.கத்தார் நாடு தீவிரவாதத்துக்கு ஆதரவாகச் செயல்படுவதாகக் கூறி, சவுதி அரேபியா, ஐக்கிய அரேபிய நாடுகள், எகிப்து மற்றும் பஹ்ரைன் ஆகிய 4 நாடுகள், தூதரகத் தொடர்புகள் உள்பட கத்தாருடனான அத்தனை தொடர்புகளையும் துண்டிப்பதாக அறிவித்துள்ளது.
2.அமெரிக்காவின் ‘நாசா’ மையம் சூரியனில் ஆய்வு நடத்த முடிவு செய்துள்ளது. அதற்காக ‘எஸ்பிபி’ (சோலார் புரோப்பிளஸ்) என்ற விண்கலத்தை உருவாக்கி வருகிறது.அடுத்த ஆண்டு (2018) கோடை காலத்தில் இந்த விண்கலத்தை சூரியனுக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளது.
3.ஐ.நா. சபையின் தலைவராக பிஜி தீவுகளைச் சேர்ந்த பீட்டர் தாம்சன் பதவி வகித்து வருகிறார். இவருடைய பதவிக்காலம் செப்டம்பர் மாதத்துடன் நிறைவடைகிறது.புதிய தலைவராக ஸ்லோவேக்கிய நாட்டு வெளியுறவு மந்திரி மிரோஸ்லாவ் லாஜ்காக் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.


இன்றைய தினம்

1.கிறிஸ்தவ இளையோர் அமைப்பு (YMCA) லண்டனில் அமைக்கப்பட்ட நாள் 06 ஜூன் 1844.
2.சோயுஸ் 11 ஏவப்பட்ட நாள் 06 ஜூன் 1971.

 

– தென்னகம்.காம் செய்தி குழு