current-affairs

தமிழகம்

1.தமிழ் மொழி செம்மொழியாக அறிவிக்கப்பட்ட நாள் 6 ஜூன் 2004.
2.இன்று தமிழ் மலையாளத் திரைப்பட நடிகை பாவனா பிறந்த நாள்.இவர் பிறந்த தேதி  6 ஜூன் 1986.

இந்தியா

1.புதுச்சேரி முதல்- அமைச்சராக நாராயணசாமி இன்று பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு கவர்னர் கிரண்பேடி பதவி பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.
2.சமீபத்தில் ஆப்கானிஸ்தான் நாட்டின் மிக உயரிய “அமீர் அமானுல்லாகான்” விருதை பிரதமர் நரேந்திர மோடி பெற்றார்.

உலகம்

1.இந்திய விமானப்படை மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE) விமானப்படை இணைந்து மேற்கொண்ட போர் பயிற்சி Exercise Desert Eagle – 2  மே 22 முதல் ஜூன் 3 வரை UAEவில் நடைபெற்று முடிந்துள்ளது.

விளையாட்டு

1.பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் ஆண்கள் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் ஜோகோவிச் 3-6, 6-1, 6-2, 6-4 என்ற செட் கணக்கில் முர்ரேவை சாய்த்து முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றார்.பெண்கள் இரட்டையர் இறுதி ஆட்டத்தில் பிரான்சின் கரோலினா கார்சியா- கிறிஸ்டினா மிலாடெனோவிச் ஜோடி 6-3, 2-6, 6-4 என்ற செட் கணக்கில் ரஷியாவின் மகரோவா- எலினா வெஸ்னினா இணையை வீழ்த்தி முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றனர்.