தமிழகம்

1.சென்னை ஓபன் டென்னிஸ் போட்டி மைதானத்தில் 956 சிறுவர் சிறுமியர்களுக்கு ஒரே நேரத்தில் டென்னிஸ் பற்றிய நுணுக்கங்கள் கற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது. இது கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.இதற்கு முன்பு 2015ல் இங்கிலாந்தின் லிவர்பூல் மைதானத்தில் 803 சிறுவர் சிறுமியர்களுக்கு கற்றுத்தரப்பட்டது.இந்த சாதனை தற்போது முறியடிக்கப்பட்டது.
2.பஞ்சாப் நேசனல் வங்கி பணமில்லா வர்த்தக கிராமம் என்ற டிஜிட்டல் கிராமங்களாக மாற்ற சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டி மற்றும் திருவாரூர் மாவட்டம் ஏத்தக்குடி ஆகியவற்றை தத்தெடுத்துள்ளது.


இந்தியா

1.ஆந்திர மாநில அரசு சார்பில் , 200 ஏக்கர் பரப்பளவில் 1500 கோடி செலவில் ” பிரம்மாண்டமான அறிவியல் அருங்காட்சியகம் ” ஒன்றை DRDO உதவியுடன் திருப்பதியில் உருவாக்க அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு அடிக்கல் நாட்டியுள்ளார்.
2.சிறு மற்றும் குறுந்தொழில் முனைவோருக்காக கூகுள் நிறுவனம், FICCI [ The Federation of Indian Chambers of Commerce and Industry ] மற்றும் Indian School of Business ஆகியவை இணைந்து Digital Unlocked என்ற பயிற்சி திட்டத்தை அறிமுகம் செய்துள்ளன.மேலும் My Business என்ற இணையதளமும் உருவாக்கப்பட்டுள்ளது.
3.சிறு மற்றும் குறுந்தொழில்களில் ஈடுபடுவோருக்காக கூகுள் நிறுவனம் , Google My Business என்ற அலைபேசி செயலியை அறிமுகம் செய்துள்ளது.
4.சுற்றுச்சூழலுக்கு உகந்த , நிலைப்படுத்தப்பட்ட இயற்கை எரிவாயுவை ( CNG ) (ஸ்கூட்டர்களில் பயன்படுத்தப்படும் சிலிண்டர்கள் மற்றும் வாயுவை) சப்ளை செய்யும் உபகரணங்களை தயாரிக்க லவோடா மற்றும் IDUK நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
5.ஆந்திரா அரசு N.T.R. ஆரோக்யா ரக் ஷா என்ற காப்பீட்டு  திட்டத்தை துவக்கியுள்ளது.இதில் தற்போது நடப்பில் இருக்கும் எந்தவொரு காப்பீட்டு திட்டத்திலும் இணையாத நபர்களுக்காக இந்த திட்டத்தை ஆந்திரா அரசு துவக்கியுள்ளது.இதற்கு ரூ 1200 செலுத்த வேண்டும்.
6.இந்தியாவிலேயே முதலவதாக கொல்கத்தாவில் மனித கழிவுகள் மற்றும் விலங்கு கழிவுகளை பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட எரிவாயு மூலம் இயங்கும் பேருந்து மார்ச் மாதம் இயக்கப்பட உள்ளது.ஏற்கனவே நிலைப்படுத்தப்பட்ட இயற்கை வாயுவால் ( CNG) இயங்கும் பஸ் கேரளாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.அதேபோல் விலங்குகள் கழிவை மட்டும் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட வாயுவால் இயங்கும் பஸ் பெங்களூருவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
7.HDFC வங்கி Facebook Messenger மூலம் Recharge , மின் கட்டணம் செலுத்த , வாடகை ஊர்திகளுக்கான கட்டணங்களை செலுத்த OnChat என்ற வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.
8.புதுடெல்லி மாநகராட்சியின் ( NDMC ) தூய்மை திட்ட தூதுவர்களாக ரியோ ஒலிம்பிக் பதக்க வீராங்கனை தீபா மாலிக் மற்றும் காலை இழந்து எவரெஸ்டில் கால் பதித்த முதல் பெண் என்னும் சாதனை படைத்த அருணிமா சின்ஹா நியமிக்கப்பட்டுள்ளனர்.


உலகம்

1.யாழ்ப்பாணத்தில் உள்ள பலாலி விமான நிலையம், பிராந்திய விமான நிலையமாக மேம்படுத்தப்படும் என்று இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
2.அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபாநாயகராக பால் ரியான் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
3.அயர்லாந்தை சேர்ந்த லிமெரிக் பல்கலைக்கழகத்தின் ஜெ.கேல்வின் காஃப்பே என்ற ஆராய்ச்சியாளர் உடற்கூறியல் வரலாற்றில் சுமார் 100 ஆண்டுகளாக மனித உடலில் மறைந்திருந்த புதிய உறுப்பை கண்டுபிடித்துள்ளனர்.மனித உடலின் குடல் பகுதியை வயிற்றுடன் இணைக்கும் ‘நடுமடிப்பு’, (Mesentery)  இத்தனை காலமாக பல்வேறு திசுக்கள் ஒன்றிணைந்த ஒரு அமைப்பாகவே கருதப்பட்டு வந்தது.ஆனால் இதை தனிஉறுப்பு என்று ஆராய்ச்சியாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.


விளையாட்டு

1.மேற்கு வங்காள மாநிலம் சிலிகுரியில் தெற்காசிய கால்பந்து கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற பெண்களுக்கான கால்பந்து இறுதிப்போட்டியில் , இந்திய மகளிர் அணி வங்காளதேசத்தை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.இதன்மூலம் தெற்காசிய கால்பந்து கோப்பையை இந்திய மகளிர் அணி தொடர்ந்து நான்காவது முறையாக வென்றுள்ளது.


இன்றைய தினம்

1.சென்னையில் கலாக்ஷேத்திரா தொடங்கப்பட்ட நாள் 06 ஜனவரி 1936.
2.இன்று ஏ.ஆர்.ரகுமான் பிறந்தநாள் தினம்.இவர் பிறந்த தேதி 06 ஜனவரி 1966.

– தென்னகம்.காம் செய்தி குழு