current-affairs

இந்தியா

1.பிரதமர் நரேந்திர மோடியை பின்பற்றி ஒடிஷா மாநிலத்தின் முதல்வர் நவீன் பட்நாயக் மாதம் ஒருமுறை 10 நிமிடங்கள் வானொலியில் உரையாற்ற உள்ளார்.
2.இந்தியப் பெருங்கடல் மாநாடு – 2016 ( Indian Ocean Conference ) செப்டம்பர் 01 மற்றும் 02ல் சிங்கப்பூரில் நடைபெற்றது.இம்மாநாட்டில் இந்திய வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் ஜிகா வைரஸ் அச்சுருத்தல் காரணமாக காணொளி காட்சி மூலம் உரையாற்றியுள்ளார்.

உலகம்

1.இந்தியாவும் வியட்நாமும் 2017ம் ஆண்டை நட்புறவு ஆண்டாக கடைபிடிக்க ஒப்புக் கொண்டுள்ளன.
2.ஜப்பானில் நடைபெற்ற அழகி போட்டியில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரியங்கா யோஷிகாவா  மிஸ் ஜப்பான் அழகியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.இவர் இந்திய தந்தைக்கும் ஜப்பானிய தாய்க்கும் டோக்கியோவில் பிறந்தவர்.இவருக்கு வயது 22.

விளையாட்டு

1.அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் 4வது சுற்றில் அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் கஜகஸ்தானை சேர்ந்த ஷிவ்டோவை வீழ்த்தினார். இது அவருக்கு 308வது வெற்றியாகும் இந்த வெற்றியின் மூலம் அதிக வெற்றிகளைப் பெற்ற மார்ட்டினா நவ்ரத்திலோவாவின் சாதனையை அவர் முறியடித்தார்.ஆண்கள் பிரிவில் 307 வெற்றிகளைப் பெற்ற ரோஜர் பெடரரின் சாதனையையும் அவர் முறியடித்துள்ளார்.இதன் மூலம் கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் அதிக வெற்றிகளை பெற்றவர் என்ற புதிய சாதனையை படைத்துள்ளார்.
2.இந்திய துப்பாக்கி சுடுதல் வீரர் அபினவ் பிந்த்ரா(33), விளையாட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.இவர் குரோஷியாவில்  2006ம் ஆண்டு உலக சாம்பியன்ஷிப் போட்டியிலும்,2008ம் ஆண்டு பீஜிங்கில் நடைபெற்ற ஒலிம்பிக்  போட்டி என இரண்டிலும் தங்கம் வென்ற ஒரே இந்தியர் என்ற பெருமையை பெற்றவர்.