தமிழகம்

1.சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இந்திரா பானர்ஜி நேற்று பதவியேற்றுக்கொண்டார்.அவருக்கு
பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். சென்னை ஐகோர்ட்டின் வரலாற்றில் இரண்டாவது பெண் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி ஆவார்.
2.உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு காரணமாக மதுபானக் கடைகளே இல்லாத சுற்றுலாத்தலம் என்ற சிறப்பினை தமிழ்நாட்டில் ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் ஏற்காடு பெற்றுள்ளது.


இந்தியா

1.சிறைகளில் இருக்கும் தண்டனை மற்றும் விசாரணை கைதிகளை சந்திக்க வரும் உறவினர்கள், நண்பர்கள் கட்டாயம் ஆதார் அடையாள அட்டையை காண்பிக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.இந்த உத்தரவு கர்நாடக மாநில சிறைகளில் அமல்படுத்தப்பட்டுள்ளது.இனி கைதிகளை பார்க்க வருபவர்கள் கட்டாயம் ஆதார் அட்டை எடுத்து வர வேண்டும் என்று கர்நாடக மாநில சிறைத்துறை டி.ஜி.பி. உத்தரவு பிறப்பித்துள்ளார்.
2.ரிசர்வ் வங்கி 200 ரூபாய் நோட்டுக்களை அச்சிட முடிவு செய்துள்ளது.இந்த நோட்டுகள் ஜூன் மாதத்துக்கு மேல் புழக்கத்திற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
3.காலம் கடந்து ஓட்டுநர் உரிமம் புதுப்பிக்கும்போது அபராதம் என்ற பெயரில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதற்கு  வகை செய்யும் மத்திய அரசின் 2 சட்ட விதிகளை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது.


வர்த்தகம்

1.இந்தியன் வங்கியின் புதிய மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரியாக கிஷோர் காரத் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.


உலகம்

1.கம்ப்யூட்டர் புரோகிராமர்கள் இனி ஹெச்-1பி விசாவுக்கு விண்ணப்பிக்க முடியாது என அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.இந்த புதிய நடைமுறை அக்டோபர் 1, 2017 முதல் அமலுக்கு வரும் எனவும் தெரிவித்துள்ளது.


இன்றைய தினம்

1.இன்று சர்வதேச விளையாட்டு வளர்ச்சி மற்றும் அமைதி தினம் (International Day of Sport for Development and Peace).
விளையாட்டு என்பது கல்விக்கான ஒரு கருவியாகும். அது வளர்ச்சி, அமைதி, சமாதானம், ஒற்றுமை, ஒத்துழைப்பு, புரிதல் ஆகியவற்றை உள்ளூர், நாடு மற்றும் சர்வதேச அளவில் மேம்படுத்த உதவுகிறது. விளையாட்டின் மூலம் உலகம் முழுவதும் ஒற்றுமையையும் ஏற்படுத்த இத்தினம் ஏப்ரல் 6 அன்று கடைப்பிடிக்கப்படுகிறது.
2.பயனியர் 11 விண்ணுக்கு ஏவப்பட்ட நாள் 06 ஏப்ரல் 1973.

 

– தென்னகம்.காம் செய்தி குழு