இந்தியா

1.8-ம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி முறை ரத்து செய்யப்படுவதாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய மந்திரிசபை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.


உலகம்

1.அமெரிக்க புலனாய்வு அமைப்பான எப்.பி.ஐ. புதிய இயக்குநராக கிறிஸ்டோபர் நியமிக்கப்பட்டதற்கு நாடாளுமன்ற செனட் சபை ஒப்புதல் வழங்கியுள்ளது.


இன்றைய தினம்

1.இன்று உலக நண்பர்கள் தினம் (World Friendship Day).
அமெரிக்க காங்கிரஸ் 1935 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமை உருவானது. இதனை தேசிய நட்பு தினமாக அமெரிக்காவில் கொண்டாடப்பட்டது. பிறகு மிகப் பெரிய திருவிழாவாகக் கொண்டாடப்பட்டது. நண்பர்கள் தினம் அமெரிக்காவை ஒட்டிய நாடுகளுக்குப் பரவியது. அதன் பின்னர் உலகம் முழுவதும் பரவியது. தற்போது உலகம் முழுவதும் இத்தினம் கொண்டாடப்படுகிறது.
2.இன்று ஹிரோசிமா தினம் (Hiroshima Day).
இரண்டாம் உலக யுத்தத்தின்போது அமெரிக்கா, ஜப்பானில் உள்ள ஹிரோசிமா என்னும் நகரத்தின்மீது 1945ஆம் ஆண்டு ஆகஸ்டு 6 அன்று லிட்டில் பாய் (Little Boy) என்ற அணுகுண்டை வீசியது. குண்டு விழுந்த சில நொடிகளில் மக்கள், கட்டிடங்கள், இரும்புகள் உள்பட அனைத்தும் ஆவியாயின. 1 லட்சத்து 40 ஆயிரம் பேர் இறந்தார்கள். இந்தப் கொடுமை மீண்டும் நிகழாமல் இருக்க இத்தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

 

– தென்னகம்.காம் செய்தி குழு