Current-Affair-Logo

தமிழகம்

1.பழம்பெரும் திரைப்பட இயக்குனர் வியட்நாம் வீடு சுந்தரம் சென்னையில் இன்று காலமானார்.

இந்தியா

1.இந்தியாவில் 10 லட்சம் பேருக்கு 18 நீதிபதிகள் என்ற குறைந்த விகிதத்தில் நீதிபதிகள் உள்ளனர் என்று மத்திய சட்ட அமைச்சகம் தெரிவித்துள்ளது.10 லட்சம் பேருக்கு 50 நீதிபதிகள் இருக்க வேண்டுமென்று 1987-ஆம் ஆண்டு சட்ட ஆணையம் பரிந்துரை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
2.சர்வதேச அறிவியல் பத்திரிகையான “எல்சீவியர்’ இதழில் அண்மையில் வெளிவந்த ஆய்வில் இந்திய துணைக் கண்டமானது 100 கோடி ஆண்டுகளுக்கு முன்பு அன்டார்க்டிகா கண்டத்தின் ஒரு பகுதியாக இருந்தது என்ற கருத்துக்கான ஆதாரத்தை புவியமைப்பியல் விஞ்ஞானிகள் தங்கள் புதிய ஆய்வில் தெரிவித்துள்ளனர் .

உலகம்

1.வஸ்தோக் 2: முதன்முதலாக ஒரு முழு நாள் மனிதன் விண்வெளியில் இருந்த பெருமையை சோவியத் விண்வெளிவீரர் கேர்மொன் டீட்டொவ் பெற்ற நாள் 06 ஆகஸ்டு 1961.
2.உலகளாவிய வலை (WWW) தொடர்பான தனது ஆவணங்களை டிம் பேர்னேர்ஸ்-லீ வெளியிட்ட நாள் 06 ஆகஸ்டு 1991.
3.இன்று ஜமேக்கா விடுதலை அடைந்த நாள்.விடுதலை அடைந்த தேதி 06 ஆகஸ்டு 1962.
4.இன்று ஹிரோசிமா தினம்(Hiroshima Day).இரண்டாம் உலக யுத்தத்தின்போது அமெரிக்கா, ஜப்பானில் உள்ள ஹிரோசிமா என்னும் நகரத்தின்மீது 1945ஆம் ஆண்டு ஆகஸ்டு 6 அன்று லிட்டில் பாய் (Little Boy) என்ற அணுகுண்டை வீசியது. குண்டு விழுந்த சில நொடிகளில் மக்கள், கட்டிடங்கள், இரும்புகள் உள்பட அனைத்தும் ஆவியாயின. 1 லட்சத்து 40 ஆயிரம் பேர் இறந்தார்கள். இந்தப் கொடுமை மீண்டும் நிகழாமல் இருக்க இத்தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
5.புகழ்பெற்ற ஹாரி பாட்டர் நாவல்களின் அனைத்து அத்தியாயங்களையும் வரி விடாமல் ஒப்பிக்கும் அளவுக்கு அசாத்திய நினைவுத் திறன் கொண்ட பெண் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பெக்கி ஷராக் (26) ஆவார்.
6.ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தலைமைப் பொறுப்பை மலேசியா ஏற்றுக் கொண்டுள்ளது.ஐ.நா. சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் 15 நாடுகள் இடம்பெற் றுள்ளன.இதில் அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன், பிரான்ஸ், சீனா ஆகியவை நிரந்தர உறுப்பு நாடுகள்.அங்கோலா, எகிப்து, ஜப்பான், மலேசியா, நியூசிலாந்து, செனகல், ஸ்பெயின், உக்ரைன், உருகுவே, வெனிசூலா ஆகியவை நிரந்தரமற்ற உறுப்பு நாடுகளாக இடம்பெற்றுள்ளன.

விளையாட்டு

1.சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் (ஐஓசி) உறுப்பினராக நீதா அம்பானி தேர்வாகியுள்ளார்.இந்தப் பதவிக்கு தேர்வு செய்யப்பட்ட முதல் இந்தியப் பெண் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். அவர் இந்தப் பதவியில் 70 வயது வரை இருப்பார்.