தமிழகம்

1.ஸ்ரீ ராமானுஜரின் வாழ்க்கை வரலாற்றை ஆங்கிலம், தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் விளக்கும் “ஸ்ரீ ராமானுஜர் வைணவ மாநிதி’’ என்ற புத்தகத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ளார்.


இந்தியா

1.உத்தரபிரதேச மாநிலம், மொராதாபாத் நகரில் உள்ள ராம்கங்கா நதிக்கரையில் எலெக்ட்ரானிக் கழிவுககளை ( e waste ) கொட்டினால், சுற்றுச்சூழல் பாதிப்புக்காக ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என்று தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அறிவித்துள்ளது.
2.100 வருட வரலாறு கொண்ட ஆந்திரப்பிரதேச பங்கனப்பள்ளி மாம்பழத்திற்கு புவிசார் குறியீடு அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.
3.‘தூய்மை இந்தியா’ திட்டத்தின் ஒரு பகுதியாக, நாடு முழுவதும் உள்ள தூய்மையான நகரங்கள் குறித்து மத்திய நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம் ஆய்வு நடத்தி, தரவரிசை பட்டியலை வெளியிட்டு வருகிறது.434 நகரங்களில் எடுக்கப்பட்ட ஆய்வின் படி இந்தூர் முதல் இடத்தையும், போபால் இரண்டாவது இடத்தையும், விசாகப்பட்டிணம் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளன.இந்த வரிசையில் தமிழகத்தின் திருச்சிராப்பள்ளி 6வது இடத்தை பிடித்துள்ளது.உத்தரப்பிரதேசத்தின் கோண்டா நகரம் அழுக்கான நகரத்தில் முதலிடத்தில் உள்ளது. மேலும், உத்தரப்பிரதேசத்தின் 50 நகரங்கள் இப்பட்டியலில் கடைசி இடங்களையே பிடித்துள்ளன.
4.பழம்பெரும் ஹிந்தி நடிகை ஆஷா பரேக்கின் சுயசரிதை Asha Parekh The Hit Girl என்ற பெயரில் வெளிவந்துள்ளது.இதை எழுதியவர்கள் ஆஷா பரேக் & காலித் மொஹம்மத் ஆவார்கள்.
5.ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநில கவர்னரான நரசிம்மன் பதவி காலத்தை நீட்டித்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.


உலகம்

1.எச்.ஐ.வி நோய் தொற்று சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் அபகாவிர் சல்ஃபேட் மற்றும் லாமிவியூடின் மாத்திரைகளை 600 மி.கி / 300 மி.கி அளவுகளில் தயாரித்து விற்பனை செய்ய அமெரிக்க உணவு மற்றும் மருந்து ஆணையம் (USFTA) தனது ஒப்புதலை வழங்கியுள்ளது.


இன்றைய தினம்

1.இன்று சர்வதேச மருத்துவச்சி நாள் (International Midwives Day).
மருத்துவச்சி என்பவர் பிரசவம் பார்ப்பவர், தாய் சேய் செவிலி, பேறுகாலப் பணிமகள் மற்றும் மகப்பேறு உதவியாளர் என பலப் பெயர்களில் அழைக்கப்படுகின்றனர். தாய் மற்றும் சேய் ஆகியோரின் நலனைப் பாதுகாப்பவர்களாக பணி புரிகின்றனர். இவர்களின் அறிவு, திறமை மற்றும் சேவையை போற்றும் வகையில் 1991ஆம் ஆண்டுமுதல் இத்தினம் உலகில் ஐம்பதிற்கும் மேற்பட்ட நாடுகளில் கொண்டாடப்படுகிறது.

 

– தென்னகம்.காம் செய்தி குழு