தமிழகம்

1.தமிழக அரசின் புதிய உள்துறை செயலாளராக நிரஞ்சன் மார்டி நியமிக்கப்பட்டுள்ளார்.தமிழக அரசின் தற்போதைய உள்துறை செயலாளராக இருந்த அபூர்வா வர்மா சுற்றுலா துறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.தமிழக சிறுதொழில் நிறுவன மேம்பாட்டு கழக செயலாளராக அபூர்வாவும், தமிழக மருத்துவ சேவை கழக நிர்வாக இயக்குநராக உமாநாத்தும் நியமிக்கப்பட்டுள்ளனர்.இதற்கான உத்தரவை தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் பிறப்பித்துள்ளார்.


இந்தியா

1.ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் புதிய தலைமை தகவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ள குர்ஷீத் ஏ கனாய் நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார்.அவருக்கு கவர்னர் வோஹ்ரா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.


இன்றைய தினம்

1.இலங்கையில் அவசரகாலச் சட்டம் அமுலாகிய நாள் 05 மார்ச் 1964.
2.பிரெஞ்சுப் படைகள் ஆஸ்திரியாவினால் தோற்கடிக்கப்பட்ட நாள் 05 மார்ச் 1793.

 

– தென்னகம்.காம் செய்தி குழு