தமிழகம்

1.சென்னை மெரினாவில் பிறப்பிக்கப்பட்டிருந்த 144 தடை உத்தரவு திரும்ப பெறப்படுவதாக காவல் துறை ஆணையர் ஜார்ஜ் அறிவித்துள்ளார்.
2.புதுச்சேரியில் மே மாதம் 1ம் தேதி முதல் ஹெல்மெட் கட்டாயமாக்கப்படுவதாக புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.


இந்தியா

1.மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வை மூன்று முறை மட்டுமே எழுத முடியும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.மேலும் தேர்வு எழுதுவதற்கான அதிகபட்ச வயது வரம்பு 25 என்று மத்திய சுகாதார அமைச்சகம் நிர்ணயம் செய்துள்ளது.இட ஒதுக்கீடு பிரிவினருக்கு 5 ஆண்டு வயது தளர்வு அளிக்கப்படும். எனவே, அவர்களுக்கான வயது வரம்பு 30 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
2.பஞ்சாப் மற்றும் கோவா மாநிலங்களில் வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது.இதில் கோவாவில் 83 சதவீத வாக்குகளும்,பஞ்சாப் மாநிலத்தில் 75 சதவீத வாக்குகளும் பதிவாகின.


உலகம்

1.ஆப்பிரிக்க யூனியன் அமைப்பில் 33 ஆண்டுகளுக்குப் பிறகு வடக்கு ஆப்பிரிக்காவைச் சேர்ந்த மொராக்கோ குடியரசு இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளது.
2.முதல் வட கிழக்கு முதலீட்டாளர்கள் மாநாடு ஷில்லாங்கில் ஜனவரி 29 மற்றும் ஜனவரி 30-ம் தேதி நடைபெற்றது.


விளையாட்டு

1.இந்தியாவில் முதல் முறையாக கொல்கத்தா அருகே Rajarhat நகரில் பல்வேறு விளையாட்டுகளை உள்ளடக்கிய அருங்காட்சியகம் உருவாக்கப்பட்டுள்ளது.ஏற்கெனவே புனே மற்றும் சென்னையில் கிரிக்கெட் அருங்காட்சியகம் உள்ளது குறிப்பிடதக்கது.


இன்றைய தினம்

1.அப்பல்லோ 14 விண்கலம் அலன் ஷெப்பர்ட், எட்கார் மிட்ச்செல் ஆகியோருடன் சந்திரனில் தரையிறங்கிய நாள் 05 பிப்ரவரி 1971.
2.உருசியாவின் சென் பீட்டர்ஸ்பர்க் நகரில் ஏர்மிட்டேச் அருங்காட்சியகம் பொது மக்களுக்குத் திறந்து விடப்பட்ட நாள் 05 பிப்ரவரி 1852.
3.ரஷ்ய மக்கள் நட்புறவுப் பல்கலைக்கழகம் மாஸ்கோவில் ஆரம்பிக்கப்பட்ட நாள் 05 பிப்ரவரி 1960.

 

– தென்னகம்.காம் செய்தி குழு