current3

இந்தியா

1.தேசிய உணவு பாதுகாப்புச் சட்டம் நடப்பு நவம்பர் மாதம் முதல் நாடு முழுவதும் அமலுக்கு வந்துள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
2.உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு அம்மாநில முதல்வர் அகிலேஷ் யாதவ் லக்னோவில் இருந்து பிரச்சார ரத யாத்திரையை தொடங்கியுள்ளார்.
3.2016 ஆம் ஆண்டிற்கான லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு(Vigilance Awareness Week)  வாரத்தின் மையக்கரு  ‘Public participation in promoting integrity and eradicating Corruption’ என்பதாகும்.
4.ஜனவரி மாதம் பதான்கோட்டில் விமானத்தளம் தாக்குதலுக்கு உள்ளானபோது, கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த விவரங்களை என்டிடிவி-ஹிந்தி சேனல் ஒளிபரப்பியதாக  நவம்பர் 9 ஆம் தேதி 24 மணிநேரம் நிறுத்தப்படும் என இந்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.
5.இன்று இந்தியத் துடுப்பாளர் விராட் கோலி பிறந்த நாள்.இவர் பிறந்த தேதி 05 நவம்பர் 1988.

உலகம்

1.இந்த ஆண்டு முதல் ஆண்டுதோறும் நவம்பர் 5-ஆம் தேதியை உலக சுனாமி விழிப்புணர்வு தினமாக கடைபிடிக்கப்படுகிறது.
2.ஐரோப்பிய விண்வெளி ஆய்வு கழகம் மற்றும் கனடா விண்வெளி ஆய்வு கழகத்துடன் இணைந்து நாசா ‘ஜேம்ஸ் வெப்’  என்ற விண்வெளி தொலை நோக்கி’யை  உருவாக்கியுள்ளது.
3.2016 ஆம் ஆண்டிற்கான ஐக்கிய நாடுகளின் உலக நகரங்கள் தினத்தின் மையக்கரு “Inclusive Cities, Shared Development” என்பதாகும்.
4.பாலஸ்தீனத்தில் உள்ள ரமல்லாவில் பாலஸ்தீன-இந்தியா தொழில்நுட்ப பூங்கா அமைக்க இந்தியா, பாலஸ்தீனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளது.
5.ஈராக் அதிபராக இருந்த சதாம் ஹுசேனுக்கு தூக்குத் தண்டனை தீர்ப்பு வழங்கிய நாள் 05 நவம்பர் 2006.

சிறப்பு செய்திகள்

2016ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட குழுக்கள்

நாராயணமூர்த்தி குழு

 • மாற்று முதலீட்டுக்கான கொள்கை என்ற தலைப்பில் தனது அறிக்கையை செபி (SEBI) அமைப்பிடம் சமர்பித்தது.

ஆர்.வி ஈஸ்வர் குழு

 • வருமான வரிச் சட்டம் 1961ன் செயல் திட்டங்களை எளிமையாக்க அமைக்கப்பட்ட ஈஸ்வர் குழுவின் அறிக்கை வெளியிடப்பட்டது

அரவிந்த் பனகாரிய குழு

 • மும்பை – அகமதாபாத் இடையிலான புல்லட் ரயில் சேவைக்கான ஆய்வை அரவிந்த் பனகாரிய தலைமையிலான குழு மேற்கொண்டுள்ளது

சியாம் பெனகல் குழு

 • மத்திய திரைப்பட தணிக்கை வாரியத்தை மாற்றி அமைப்பதற்காக சியாம் பெனகல் தலைமையிலான குழு அமைக்கப்பட்டுள்ளது

வெங்கையா நாயுடு குழு

 • ஜாட் இனத்தவர்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்பதனை ஆராய மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது

தீபக் நாயக் குழு

 • கோதாவரி ஆற்றை தூய்மைபடுத்தி புதுப்பொலிவு பெற செய்ய வேண்டிய வழிமுறைகளை ஆராய தீபக் நாயக் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது

மகேஷ் குமார் சிங்லா குழு

 • மத்திய அரசு அசாம் மாநிலத்தில் உள்ள குறிப்பிட்ட 6 மலைவாழ் மக்களின் இட ஒதுக்கீடு நிலையை ஆராய மகேஷ் குமார் சிங்லா தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது

திவாகர் ரெட்டி குழு

 • திவாகர் ரெட்டி தலைமையிலான குழு ‘நுகர்வோர் பாதுகாப்பு மசோதா தொடர்பான தனது அறிக்கையை பாராளுமன்ற நிலைக்குழு முன் சமர்பித்தது. இக்குழு தனது அறிக்கையில் சமூகத்தில் மிக பிரபலமானவர்கள் விளம்பரத்தில் நடிக்கும்பொழுது அப்பொருட்களின் தரத்தினை அறியாமல் தகவல்களை பரப்பினால் அவர்களுக்கு 5 ஆண்டு வரை சிறை தண்டனையுடன் 50 இலட்சம் அபராதம் விதிக்கவும் பரிந்துரைத்துள்ளது

அசோக் தல்வாய் குழு

 • மத்திய அரசு 2022 ஆம் ஆண்டிற்குள் விவாசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக உயர்த்த இலக்கு நிர்ணயித்துள்ளது .இதற்கான திட்ட வரவை அசோக் தல்வாய் தலைமையில் குழு அமைக்கப் பட்டுள்ளது

பி.பி தாண்டன் குழு

 • அரசு விளம்பரங்கள் தொடர்பாக உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பினை சரியாக பின்பற்றப்படுகிறதா என ஆராய பி.பி தாண்டன் தலைமையில் குழு அமைக்கப் பட்டுள்ளது

மதுக்கர் குப்தா குழு

 • இந்தியா -பாகிஸ்தான் எல்லை பகுதியில் உள்ள எல்லைகளை பாதுக்காப்பு மிக்கதாக மாற்ற வழிமுறைகளை வழங்க மதுக்கர் குப்தா தலைமையில் குழு அமைக்கப் பட்டுள்ளது

அசோக் லகாரி குழு

 • மத்திய அரசு ஆபரண நகைகள் மீதான கலால் வரி விதிப்பை செயல்படுத்துதல் தொடர்பாக அசோக் லகாரி தலைமையில் குழு அமைக்கப் பட்டுள்ளது.