tamil

தமிழகம்

1.சட்ட விரோத நடவடிக்கைகள் சட்டத்தின் கீழ், குற்றஞ்சாட்டப்பட்ட நபரை காவலில் வைக்கும் காலத்தை 180 நாள்கள் வரை நீட்டிப்பதற்கு மாஜிஸ்திரேட்டுகளுக்கு அதிகாரம் உள்ளது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்தியா

1.பிரதமர் நரேந்திர மோடி கடந்த நவம்பர் 28-ம் தேதி டெல்லி ஆனந்த விகார் மற்றும் காரக்பூர் இடையிலான ஹம்சபர் எக்ஸ்பிரஸ் ரயிலை துவக்கி வைத்தார்.மேலும் இந்த ரயிலில் கண்காணிப்பு கேமரா வசதி ,LED திரை வசதி ,டீ , காபி , பால் மற்றும் குளிர்பானங்களை பெறுவதற்கான தானியங்கி இயந்திரம் ஆகிய வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன.
2.கோவாவில் 47வது சர்வதேச திரைப்பட விழா நடைபெற்றது.இந்த விழாவில் சிறந்த திரைப்படத்திற்கான தங்கமயில் விருது இரானிய திரைப்படம் Daughter வென்றுள்ளது.இந்த திரைப்படத்தை இயக்கியவர் Reza Mirkarimi ஆவார்.
3.ஆந்திராவில் அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு விரைவில்  இலவச செல்லிடப்பேசி திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்துள்ளார்.
4.இந்தியாவுக்கும், கத்தாருக்கும் இடையே நுழைவு இசைவு (விசா), இணையதளப் பாதுகாப்பு, முதலீடுகள் உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக ஐந்து ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.இந்தியாவிற்கு முதல்முறையாக சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார் கத்தார் பிரதமர் ஷேக் அப்துல்லா-பின் நாஸர்-பின் கலீஃபா அல் தானி.அவர் முன்னிலையில் இந்த ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

உலகம்

1.பருவநிலை மாறுபாடு பிரச்சினையை எதிர்கொள்ள கடந்த 2005 அக்டோபரில் ‘சி40 மேயர்கள்’ அமைப்பு லண்டனில் தொடங்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பில் உறுப்பினர்களாக தற்போது 90 நகரங்கள்  உள்ளன.இதில் திடக்கழிவு மேலாண்மையில் சிறப்பாக செயல்பட்ட கொல்கத்தா, மிலன்,ஆக்லாந்து ஆகிய 3 நகரங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
2.நெதர்லாந்து நாட்டின் ஹேக் நகரில் 16-வது சர்வதேச குழந்தைகளுக்கான அமைதி விருது வழங்கும் விழா நடைபெற்றது.இவ்விழாவில் இந்தியாவை பூர்வீகமாக கொண்ட துபாய் வாழ் சிறுமி கேஹாசன் பாசுவுக்கு (16), அமைதிக்கான விருது வழங்கப்பட்டுள்ளது.
3.ஆப்பிள் நிறுவனத்தின் ஏர்பாட்ஸ் வயர்லெஸ் ஹெட்போன்கள் விரைவில் விநியோகம் செய்யும் பணிகள் சில வாரங்களில் துவங்கும் என ஆப்பிள் நிறுவன தலைமை அதிகாரி டிம் குக் தெரிவித்துள்ளார்.
4.இத்தாலி நாட்டில் புதிய சட்டதிருத்தத்தின் மீது நடைபெற்ற பொதுவாக்கெடுப்பில் தோல்வியடைந்ததையடுத்து  பிரதமர் மட்டியோ ரென்சி தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.

விளையாட்டு

1.சர்வதேச தடகள சம்மேளனத்தின் 2016-ம் ஆண்டுக்கான சிறந்த வீரருக்கான விருதை உசைன் போல்ட் பெற்றுள்ளார்.இந்த விருதை அவர் 6-வது முறையாகப் பெறுவது குறிப்படத்தக்கது.மகளிருக்கான விருதை அல்மாஸ் அயனா பெற்றுள்ளார்.
2.இந்தியாவில் முதன்முறையாக புனேவைச் சேர்ந்த Finkick Adventures நிறுவனம்  நீருக்கடியிலான விளையாட்டு திருவிழாவை கடந்த நவம்பர் 27-ம் தேதி நடத்தியது.

முக்கிய தினங்கள்/வாரங்கள்

1.இன்று சர்வதேச பொருளாதார மற்றும் சமுதாய முன்னேற்ற தன்னார்வலர்களின் தினம் (International Volunteer Day for Economic and Social Development).
தன்னார்வ சேவையை உலகம் முழுவதும் செய்ய வேண்டும். நாடுகள் பாதிப்படையும்போது பொருளாதார உதவி மற்றும் உணவு உதவிகளையும் செய்ய வேண்டும். இதற்காக ஐ.நா. சபை 1985ஆம் ஆண்டு இத்தினத்தை அறிவித்தது. தன்னார்வலர்களைப் பலப்படுத்தவும், ஊக்கப்படுத்தவும் இத்தினம் கொண்டாடப்படுகிறது. இத்தினத்தை தனியார் நிறுவனங்களும் 2006ஆம் ஆண்டிலிருந்து கொண்டாடுகின்றன.
2. சென்னை கன்னிமாரா பொது நூலகம் ஆளுநர் சர் ஆர்தர் ஹாவ்லக் என்பவரால் பொது மக்களுக்காகத் திறந்து விடப்பட்ட நாள் 05 டிசம்பர் 1896.
3.எஸ்டிடி தொலைபேசி இணைப்பு சேவை இங்கிலாந்தில் இரண்டாம் எலிசபெத் மகாராணியால் ஆரம்பிக்கப்பட்ட நாள் 05 டிசம்பர் 1958.
4.இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகம் குளிர்திரவ ஏவுகணையை வெற்றிகரமாக சோதித்திருப்பதாக அறிவித்த நாள் 05 டிசம்பர் 2003.
5.இன்று உலகப்புகழ் பெற்ற ஓவியர்,அமெரிக்க இயக்குநர் வால்ட் டிஸ்னி பிறந்த நாள்.இவர் பிறந்த தேதி 05 டிசம்பர் 1901.