இந்தியா

1.Public Private Partnership மூலம் குஜராத்தின் அகமதாபாத்தில் அமைக்கப்பட்டுள்ள பல்வேறு விளையாட்டு போட்டிகளை நடத்தக்கூடிய அளவிலான Trasstadia Arena வை (டிரான்ஸ்டேடியா அரங்கம்) பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைத்துள்ளார்.
2.குஜராத்தின் காந்தி நகரில், ஜூன் 30 முதல் ஜூலை 2 வரை Textiles India 2017 கண்காட்சி நடைபெற்று முடிந்துள்ளது.
3.ஒற்றை கொம்பு காண்டாமிருகங்களை பாதுகாக்க, சிறப்பு காண்டாமிருகம் பாதுகாப்பு படையை (Special Rhino Protection Force – SRPF) உருவாக்கவுள்ளதாக அசாம் மாநில அரசு அறிவித்துள்ளது.
4.பிரபல எழுத்தாளர் பிரீத்தி ஷெனாய், தீபா மாலிக் (மாற்றுத்திறனாளி வீராங்கனை) பாடகி கவிதா கிருஷ்ணமூர்த்தி மற்றும் ரன்வீர் பிரார் (T.V. பிரபலம்) ஆகியோர் Brands Academy வழங்கும் இந்த ஆண்டின் சிறந்த இந்தியர் விருது பெற்றுள்ளார்கள் .
5.அடுத்த நிதியாண்டு முதல் விவசாயத்துறைக்கு தனியாக பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என தெலுங்கானா மாநில அரசு அறிவித்துள்ளது.
6.தலைமை தேர்தல் ஆணையாளராக பதவி வகிக்கும் நசிம் சைதி, ஜூலை 06 அன்று ஓய்வு பெற இருப்பதால், 20வது இந்திய தலைமை தேர்தல் ஆணையாளராக அச்சல் குமார் ஜோதி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.


இன்றைய தினம்

1.1954 – பிபிசி தன் முதல் தொலைக்காட்சிச் செய்தியை ஒளிபரப்பியது.
2.1954 – ஆந்திரப் பிரதேச உயர் நீதிமன்றம் நிறுவப்பட்டது.

 

– தென்னகம்.காம் செய்தி குழு